தேர்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம் நிகழும்
சென்னை:
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பாஜக அரசுகவிழலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரிகூறினார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் மீண்டும் தொடர்ந்து 6ஆவதுமுறையாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியைக் கைப்பற்றும். தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும்பாஜக தோல்வியடையும்.
தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் அணி மாற்றங்கள் வரலாம். மத்தியில் பாஜக அரசால் தொடர்ந்து ஆட்சி நடத்தமுடியாத நிலை கூட வரலாம்.
பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளையுமே எங்கள் கட்சி எதிர்க்கிறது.தமிழகத்தில் கூட அதிமுகவுடன் மட்டுமேகூட்டணி வைத்துள்ளோம். அவர்களுடன்தான் தொகுதிப் பங்கீடு செய்துள்ளோம்.
மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே இத்தகைய கூட்டணியை வைத்துள்ளோம். அதிமுகபெரும்பான்மை இடங்களைப் பெறும். ஜெயலலிதா முதல்வராக முடியுமா என்பதைப் பற்றி தேர்தலுக்குப் பின்பார்க்கலாம் என்றார் சீதாராம் யெச்சூரி.












Click it and Unblock the Notifications