அரசியலே என் உயிர்மூச்சு: நடிகர் நெப்போலியன்
சென்னை:
இனி நான் அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். சினிமாவிலும் நடித்துக் கொள்வேன் எனவில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் நடிகர் நெப்போலியன் கூறினார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் அவர் கூறுகையில், தி.மு.கவில் எனக்கு சீட் கிடைத்தது நான்செய்த பாக்கியம். இதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
5 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தல்வரும் போது நெப்போலியன்தான் மீண்டும் இங்கு போட்டியிட வேண்டும்என மக்கள் கேட்டுக் கொள்ளும் விதமாக நான் நடந்து கொள்வேன் என்றாார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறுகையில், நான் போட்டியிடும் வில்லிவாக்கம்தொகுதியில் இருக்கும் 8 லட்சத்து 19 ஆயிரம் வாக்காளர்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும். என்னை எதிர்த்துபோட்டியிடும் வேட்பாளர்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும் இதுதான் எனது பேராசை.
நான் இனி அரசியலில்தான் முழு கவனம் செலுத்துவேன். திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்வேன்.
என் தொகுதியில் மட்டுமல்ல. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் 80 சதவிகிதம் அடிப்படை வசதிகள் செய்துமுடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகள் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து முடிக்கப்படும்.
நான் நடிகனாக இருந்து அரசியலுக்கு வரவில்லை. அரசியலிலிருந்துதான் நடிகனானேன். எந்தெந்தபிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என எனக்கு தெரியும்.
டாக்டர்களும், வக்கீல்களும் அவர்கள் வேலையையும் பார்த்துக் கொண்டு, அரசியலிலும் ஈடுபடும்போது நடிகர்கள்அரசியலில் ஈடுபடுவதில் என்ன தவறு.
வேறு வேலை இல்லாமல் அரசியலில் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்றால், வேலை எதுவும் இல்லாமல்சும்மா இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபட முடியும்.
தொகுதியை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டபின்புதான் நான் எந்த வாக்குறுதியும் தர முடியும். அடிப்படைபிரச்சனைகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளேன். எம்.எல்.ஏ. ஆனவுடன் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிமேற்கொள்வேன்.
தி.மு.க. சட்டத்திற்கு கட்டுப்பட்டது. சட்டத்திற்கு மீறி ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரதுவேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
நடிகர் சரத்குமார், சந்திரசேகர்ஆகியோர் லோக்சபா தேர்தலில்தான் போட்டியிட்டார்கள். 30 ஆண்டுகளுக்குப்பின்நடிகன் என்ற முறையில் நான்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன்.
ஸ்டாலின் முதல்வராவதற்கு தான் தடையாக இருப்பதால்தான் தன்னை தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டார்என ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரை கடந்த தேர்தலில் சுகவனம் என்ற சாதாரண வேட்பாளரே தோற்கடித்தார் என்பது அவருக்குத் தெரியும்.ஸ்டாலினுக்கு முதல்வராகும் எல்லா தகுதிகளும் உள்ளது. வைகோவுக்கு தன் மேல் நம்பிக்கை இல்லாததால்தான்வாஜ்பாய் படத்தை பயன்படுத்துகிறார்.
கடந்தமுறை தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த போது சோனியாகாந்தியை 4 மணிநேரம் காக்கவைத்து ஜெயலலிதாஅவமானப்படுத்தினார். மீண்டும் அது போன்ற அவமானப்பட விருப்பமில்லாததால்தான் சோனியாகாந்திதமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வரவில்லை.
எம்.ஜி.ஆர்.போல் முதல்வராக வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. இருப்பதைவிட்டுவிட்டுபறப்பதை பிடிக்க நான் ஆசைப்பட மாட்டேன். எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என கடவுளிடம்நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications