பிரச்சார விதிமுறையை மீறிய நடிகர் சரத்குமார் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

ராசிபுரம்:

தேர்தல் விதிமுறையை மீறி பிரச்சாரம் செய்ததற்காக நடிகர் சரத்குமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளைஆதரித்து நடிகர், நடிகைகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். ராசிபுரத்தில் தி.மு.க. வேட்பாளரானராமலிங்கத்தை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சரத்குமார் வர தாமதமானது. தேர்தல் விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்கு மேல் மைக் செட் மூலம் பிரச்சாரம்செய்ய முடியாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் போலீசார் சொன்னதன் பேரில் மைக்செட் அணைக்கப்பட்டது.

சரத்குமார் இரவு 10.25 மணிக்கு பிரச்சார மேடைக்கு வந்து சேர்ந்தார். வேட்பாளர் ராமலிங்கம் பிரச்சாரத்துக்குஅனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டாலும் மைக் மூலம் பிரச்சாரம் செய்ய கிரேஸ் டைம் அனுமதிபெற்றுள்ளோம் என மேடையில் அறிவித்தார். அதன் பின் சரத்குமார் ராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம்செய்தார்.

இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சரத்குமார், ராசிபுரம் தி.மு.க செயலாளர் ராமதாஸ், தி.மு.க.வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+