திமுக அமோக வெற்றி பெறும் என்கிறார் அத்வானி
கோவை:
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என திருப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி நம்பிக்கைதெரிவித்தார்.
தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்ட நாளான இன்று திருப்பூரில் அத்வானி பிரச்சாரம் செய்தார். இங்குநடந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னர், அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் கடந்த சில நாட்களில் 5 மாநிலங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்த பிரச்சாரத்தின் போது தேசியஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கேரளா மற்றும் புதுவையில் பாரதிய ஜனதாவிற்கு இதுவரை ஒரு இடம் கூட இல்லை. இம்முறை இங்குஎங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும். தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் தலா ஒரு எம்.எல்.ஏ.,க்கள் கடந்ததேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ஓரிலக்க எண்ணிக்கை இம்முறை இரண்டு இலக்கமாக மாறும். தமிழகத்தில் தி.மு.க சிறப்பானஆட்சியைக் கொடுத்துள்ளது. எனவே, மீண்டும் திமுக ஆட்சியைக் கைப்பற்றும். அதிமுக பொதுச் செயலர்வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது பற்றிய சர்ச்சை தான் தமிழகத்தில் இருந்தது. பத்திரிக்கைகளிலும் இது தான்பரபரப்பாகப் பேசப்பட்டது.
இருந்தாலும் இந்த விஷயம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. தேர்தல் வரும் முன்பே எல்லோரும் அறிந்தவிஷயம் தான். இந்திய குடிமகன் அல்லாதவர், தேர்தலில் போட்டியிட போதுமான வயது நிரம்பாதவர், மனநிலைசரியில்லாதவர், குற்றாவளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தெரிந்ததே.
சட்டம் தெரிந்தவர்கள் இது பற்றி விவாதித்து அறிந்திருப்பர். இத்தகைய சிறு விஷயத்தை விவாதிக்க வேண்டியஅவசியம் இல்லை.அதே போல, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வர் ஆக முடியாது.
மத்தியில் சோனியாகாந்தியை பிரதமராக்க வேண்டும் என காம்யூனிஸ்ட்டுகள் வாஜ்பாய் அரசை எதிர்த்து 1999 ல்ஓட்டுப் போட்டு தோல்வியுறச் செய்தனர். ஆனால், இப்போது மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில்காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிரும் புதிருமாகப் போட்டியிடுகின்றனர்.
இந்தப் போட்டி கேலிக்குரிய போட்டியாக உள்ளது. தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டணிவைத்துக் கொண்டுள்ளனர்.
பாரதிய ஜனதாக் கட்சி தேசிய கட்சியாக வளர்ந்து வருகிறது. தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், தேய்ந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாரதிய ஜனதாக் கட்சி அமைத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ளசிறு கட்சிகளை அரவணைத்துக் கொண்டுள்ளது.
மதிமுக வினர் வாஜ்பாய் போஸ்டரைப் பயன்படுத்துவதில் எவ்வித தடையும் இல்லை. அவர் பிரதமர் என்பதால்யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏன், காங்கிரஸ் வேட்பாளர்களே வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளட்டுமே. அப்படிப் பயன்படுத்தினால் இது கேலிப் போட்டியாகி விடாது.
தேர்தலுக்குப் பிறகு திமுகவினர், மதிமுக அமைச்சர்களை விலக்க கோருவார்களா என்ற யூகத்தின்அடிப்படையிலான கேள்விக்குப் பதிலளிக்கமுடியாது என்றார் அத்வானி.
பேட்டியின்போது தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலர் இல. கணேசன், லலிதா குமாரமங்கலம்,மாநில வர்த்தக அணித் தலைவர் எஸ்.ஆர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications