கோவையில் த.மா.கா. உடைந்தது
கோவை:
கோவை மாவட்ட தமிழ் மாநில காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. கோவை வடக்கு மாவட்டத் தலைவர் உட்படநிர்வாகிகள் ப.சிதம்பரத்தின் அணியில் இணைந்தனர்.
இவர்கள் தொண்டாமுத்ததூர் தொகுதியில் எஸ். ஆர். பாலசுப்ரமணியத்திற்கு எதிராகவும், திமுகவிற்குஆதரவாக இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் குதித்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொண்டமுத்தூர் தொகுதியில் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது நான்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மாநில காங்கிரஸ்உறுப்பினர்கள், சிதம்பரத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் இணைந்தனர்.
தொண்டமுத்தூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எஸ். ஆர். பாலசுப்ரமணியத்திற்குஇது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது கோவை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த எம்.என்கந்தசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ப.சிதம்பரத்தின் தலைமையிலான ஜனநாயகப் பேரவையில்இணைந்தனர்.
இவர்கள் திமுக வேட்பாளர் சுகன்யா ராஜரத்தினத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கினர். எனவே, இந்ததொகுதியில் எஸ்.ஆர் பாலசுப்ரமணியத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இவருக்கு இந்த தொகுதியில் 3 வது இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்திற்கு மதிமுகதள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து எம்.என் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள், கிராமக் கமிட்டித் தலைவர்கள், ஆகியோர்இணைந்து தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்தோம்.
ப.சிதம்பரத்தின் அழைப்பை ஏற்று இந்த ஜனநாயகப் பேரவையில் இணைந்துள்ளோம். 96ம் ஆண்டு ஊழலைஎதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்த கொள்கைகளை விட்டு விட்டு இப்போதுஅதே அணியில் மூப்பனார் இணைந்துள்ளார்.
இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த மூப்பனார், இப்போது எந்த நிலையில் உள்ளார் எனத் தெரியவில்லை.எனவே, வெகுஜன விரோதிக்கு இங்கு இடம் கிடையாது என்ற வகையில் கோவை வடக்கு மாவட்டத்தில்தொண்டமுத்தூர் தொகுதியில் எஸ். ஆர் பாலசுப்ரமணியத்தை தோற்கடிப்பது என முடிவு செய்தோம் என அந்தஅறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீட்டர் அல்போன்சுடன் எம்.என் கந்தசாமி, வால்பாறையில் நடந்த தமிழ் மாநிலகாங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வால்பாறைப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சிதம்பரம் வந்தபோது கூட இணையாத இவர்கள் இப்போது பிரச்சாரத்தின் இறுதி நாளில் ஜனநாயகப் பேரவையில்இணைந்து திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் இறங்கினர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications