சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்ட கருணாநிதி
கூட்டணி கட்சிகளின் பிரச்சாரம்:
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி,புதிய தமிழகம் விடுதலைசிறுத்தைகள், தமிழ்தேசம், தமிழர் பூமி,புதிய நீதிக்கட்சி, முத்தரையர் சங்கம்,எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.,எம்,ஜிஆர்.கழகம், தமிழக ஐக்கிய முஸ்லிம் ஜமாத் உள்ளிட்ட17 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பல ஜாதிக்கட்சிகள்.
மத்தியில் ஆண்டு வந்த பா.ஜ.க.அரசை, அ.தி.மு.க. கவிழ்த்தது முதல் அவர்கள் மீதுகடும் கோபம் கொண்டுள்ள பா.ஜ.க ஜெயலலிதா மீது ஊழல் குற்றத்தையே முக்கியானபுகாராக கூறி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கேட்டது,
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் பிரச்சாரம் அ.தி.மு.க. ஊழல் கட்சிஎன்பதும் தலித்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதாகத் தான்இருந்தது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் புதிய தமிழகம் கட்சிதலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமியும் கூட அ.தி.மு.கவை தலித் விரோத கட்சி என்றுபிரச்சாரம் செய்தார்.
பல முதலியார் சமூகத்தினரை உள்ளடக்கிய ஜாதிக்கட்சி புதிய தமிழகம்.. இவர்களும்அ.தி.மு.வை ஊழல் கட்சி என குற்றம் சாட்டி, பா.ம.கவை ஜாதிக்கட்சி என குற்றம்சாட்டினர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்று, ஜெயலலிதாவிடமிருந்து விலகி, ஊழல்குற்றமும் சுமத்தப்பட்டுள்ள கண்ணப்பன் ஜெயலலிதாவை ஊழலின் மொத்த உருவம்என வர்ணித்து அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. தி.மு.கவுக்கு அமோக ஆதரவுதாருங்கள் என பிரச்சாரம் செய்தார்.
இதே வழியையே பின்பற்றினார் தமிழர் பூமி கட்சி தலைவரும். முன்னாள் அ.தி.மு.க.அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன்.
ஊழல், ஊழல், ஊழல் இது ஒன்றையே தாரக மந்திரம் போல் வைத்துக் கொண்டு, அதைவைத்தே பிரச்சாரம் செய்து வந்தன தி.மு.கவும், அதன் கூட்டணி கட்சிகளும்.
நல்லாட்சி தொடர, பொற்கால ஆட்சி தொடர, ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சிமீண்டும் வராதிருக்க தி.மு.க.கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார் கருணாநிதி.
தி.மு.க கூறிக் கொள்ளும் பொற்கால ஆட்சி தொடருமா?
இதற்கான விடைகள் 13ம் தேதி தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications