வெண்ணிற ஆடை நிர்மலா பிரச்சாரத்தில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி:
ஜெயலலிதா பிரச்சாரம் செய்து முடித்த பின் தி.மு.கவுக்கு ஆதரவாக வெண்ணிற ஆடை நிர்மலா பிரச்சாரம்செய்யட்டும் என அ.தி.மு.கவினர் கூறியதால் இரு கட்சியினருக்கும் ஏற்படவிருந்த மோதலை போலீசார் தடுத்துநிறுத்தினர்.
வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதாவும், நிர்மலாவும்.
வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானதால் நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா என்று அழைக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இறந்த பின்பு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவிதலைமையிலான அணி அ.தி.மு.க,(ஜா) எனவும், ஜெயலலிதா தலைமையிலான அணி அ.தி.மு.க. (ஜெ) எனவும்பிரிந்தது.
அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து ஜானகி அணியின் வேட்பாளராக வெண்ணிற ஆடைநிர்மலா போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் வெண்ணிற ஆடை நிர்மலா தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் வரவிருக்கும்தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்துள்ளார் வெண்ணிற ஆடை நிர்மலா.
அவரும், ஜெயலலிதாவும் ஒரே நாளில், ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்யவிருந்தது வாக்காளர்களால் ஆவலுடன்எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் பிரச்சாரம் துவங்கும் முன் தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் நிலைஏற்பட்டது. போலீசார் தலையீட்டால் மோதல் தவிர்க்கப்பட்டது.
வியாழக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளை ஆதரித்து நடிகர்,நடிகைகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கள்ளக்குறிச்சியில் பிரச்சாரம் செய்யவிருந்தார். அதேநாளில் கள்ளக்குற்சியில் தி.மு.கவுக்கு ஆதரவாக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பிரச்சாரம் செய்யவிருந்தார்.
ஜெயலலிதா வருவதற்கு காலதாமதமானதால் தி.மு.கவினர் வெண்ணிறஆடை நிர்மலா பிரச்சாரம் செய்யவதற்காகஅ.தி.மு.க. ஒலி பரப்பிவரும் பிரச்சார பாடல்களை நிறுத்த வேண்டும் என போலீசாரிடம் கூறினர்.
ஆனால் அதற்கு அ.தி.மு.கவினர் மறுப்பு தெரிவித்து, ஜெயலலிதா பிரச்சாரம் செய்துவிட்டு போன பின்புவெண்ணிற ஆடை நிர்மலா பிரச்சாரம் செய்யடும் என கூறி விட்டனர்
இதனால் கோபமடைந்த தி.மு.க தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, அ.தி.மு.கவுக்கு எதிராக கோஷம்எழுப்பினர்.
இதைக்கண்ட அ.தி.மு.கவினர் தி.மு.கவினரை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலைஉருவாகியது.
கோபத்துடன் ஓடி வந்த அ.தி.மு.கவினரை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இதனால் இருகட்சியினருக்கும் இடையே ஏற்படவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications