லல்லு கைது உத்தரவு நிறுத்தி வைப்பு
டெல்லி:
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் உள்பட 69 பேருக்கு ஜாமீனில் வெளிவரஇயலாத அளவுக்குப் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் தாமஸ் மற்றும் சேத்தி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் சனிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்து.
பல கோடி ரூபாய்க்கு நடந்த கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவுக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத அளவுக்குக் கைது செய்யுமாறு சிபிஐ தனி நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதிஉத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இதனிடையே, இதே வழக்கில் வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட ஹிந்துஸ்தான் பார்மசூட்டிகல்ஸ் அதிபர் சஞ்சய் குமாரை, மே22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications