முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்:சாரங்கி
சென்னை:
முதல் சுற்று தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர்மிருத்யுஞ்சய் சாரங்கி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் 101 மையங்களில் ஞாயிற்றுக்கிழமைஎண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முதல் கட்ட முடிவுகள் 10 மணிக்கு வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் இருக்கும்தேர்தல் அதிகாரிகள் உடனுக்குடன் முடிவுகளை அறிவிப்பார்கள்.
அனைத்து தொகுதிகளுக்கும் 10 வாக்கு எண்ணப்படும் மேஜைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய சட்டசபைத் தொகுதிகளுக்கு 2 அறைகளும், 10 மேஜைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒருமேற்பார்வையாளரும், ஒரு உதவியாளரும் இருப்பார்கள்.
வாக்குகள் எண்ணப்படும் அனைத்து மையங்களுக்கும் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சீல் உடைக்கப்பட்டுதேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பமாகும்.
ஒவ்வொரு சுற்றி முடிவும், வாக்கு எண்ணும் மையங்களின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள கரும்பலகையில் எழுதி பொதுமக்களுக்குத்தெரிவிக்கப்படும்.
தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு வைத்திருக்கப்படும் என்றார் சாரங்கி.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications