நாளை ஓட்டு எண்ணிக்கை
சென்னை:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளஇடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
வாக்குகள் எண்ணப்படும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு, பகலாக காவல் காத்து வருகிறார்கள். காலை 8மணிக்குத் தொடங்கும் ஓட்டு எண்ணிக்கை பிற்பகல் 2 மணிக்குள் முடிவடைந்து விடும்.
ஓட்டு எண்ணும் இடத்திற்குள் சூட்கேஸ், ரேடியோ, செல்போன், வாக்கிடாக்கி போன்ற கருவிகள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 101 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், மெட்டல்டிடெக்டர் கருவி வைத்திருப்பவர்களும் சோதனை செய்யப்பட்ட பிறகே வாக்குகள் எண்ணப்படும் இடத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
வாக்குகள் எண்ணும் மையத்தில் முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் முகவர்கள், மாநில கட்சிகளின் முகவர்கள்,அங்கீகரிக்கப்பட்ட பிற மாநில கட்சிகளின் முகவர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் என்ற வரிசைக்கிரமத்தில் அமரவைக்கப்படுவார்கள்.
வேட்பாளர்களும், அவர்களது தேர்தல் ஏஜன்டுகளும் மட்டுமே வாக்குகள் எண்ணும் கூடத்தில் அனைத்து பகுதிக்கும் செல்லஅனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications