அமைச்சர் பதவி கோருகிறார் காளிமுத்து?
சென்னை:
சபாநாயகர் பதவியை ஏற்பதில் அதிமுக அவைத் தலைவர் டாக்டர் காளிமுத்து விரும்பவில்லை என்றுகூறப்படுகிறது. பதிலாக அவர் அமைச்சர் பதவி தருமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகபேச்சு அடிபடுகிறது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 5 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது. வருகிற 21-ம் தேதிதற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே அதற்குள் புதிய சட்டசபைக்கான அறிவிப்பைதேர்தல் அலுவலகம் வெளியிடும்.
இந்த நிலையில், புதிய சட்டசபையில் சபாநாயகராக செயல்படப் போகிறவர் யார் என்ற சஸ்பென்ஸ்அதிகரித்துள்ளது. அதிமுகவில் சபாநாயகர் பதவிக்கு உரியவர் யார் இருக்கிறார் என்ற விவாதம் மக்களிடையேஅதிகரித்துள்ளது. தமிழ்க்குடிமகனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்தற்போது எம்.எல்.ஏவாக இல்லை.
முதல்வரும் எம்.எல்.ஏவாக இல்லாத நிலையில், சபாநாயகரையும் எம்.எல்.ஏவாக இல்லாதவரைப் போட்டால்மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
அதன் பிறகு அதிமுக அவைத் தலைவரும், திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவுமான காளிமுத்துவைசபாநாயகராக நியமிக்க ஜெயலலிதா முடிவு செய்தார். இந்த முடிவு காளிமுத்துவிடம் நேரடியாகத்தெரிவிக்கப்பட்டது. ஆனால் காளிமுத்து இதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தன்னை அமைச்சராக்குமாறு அவர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால்ஜெயலலிதா தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவரான காளிமுத்துவிடம் கோபித்துக் கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை.பல கஷ்டங்கள் வந்தபோதிலும் தன்னுடன் இருந்த காளிமுத்து விரும்பியதை செய்யவே ஜெயலலிதாவிரும்புகிறார். இருந்தாலும் சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு காளிமுத்துவை தொடர்ந்து வற்புறுத்திவருகிறார்.
காளிமுத்து சபாநாயகர் பதவியை ஏற்பாரா, இல்லையா என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications