ஜெ. -- பிரணாப் முகர்ஜி இன்று சந்திப்பு
பாண்டிச்சேரி:
அதிமுக ஆதரவுடன் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் திட்டமிட்டுள்ளதால், இதுகுறித்து தமிழகமுதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னைவந்துள்ளார்.
சென்னை வந்துள்ள அவர் புதன்கிழமை பிற்பகல் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை இரவே சென்னை வந்துவிட்ட பிரணாப் முகர்ஜி, பாண்டிச்சேரியில் காங்கிரஸ்ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை ஜெயலலிதாவிடம் பேசி தீர்த்து வைப்பார் என்றும் பாண்டிச்சேரியில்ஆட்சியமைக்க அதிமுகவின் ஆதரவை அவர் கேட்பார் என்றும் தெரிகிறது.
பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களைப் பெற்றுள்ளது. இதில்தமாகா 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 11 தொகுதிகளையும் பெற்றுள்ளது.
யாருக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அதிமுகவின் ஆதரவைப் பெற்றுத்தான் பாண்டிச்சேரியில்ஆட்சியமைக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இதுகுறித்து ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப்முகர்ஜி செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்தார். அவர் புதன்கிழமை பிற்பகல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசுகிறார்.
ஏற்கனவே பாண்டிச்சேரியில் ஆட்சியமைக்க அதிமுகவிடம் காங்கிரஸ் ஆதரவு கேட்டால் நாங்கள் கொடுக்கத்தயார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பதற்குதமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆதரவு கேட்போம். ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கைஇருக்கிறது.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு 13 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சியமைக்க இன்னும் 3 இடங்கள்தேவை. அதிமுக கூட்டணி 3 இடங்களைப் பெற்றுள்ளதால் அவர்களிடம் நாங்கள் ஆதரவு கேட்கிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications