பரிதி ஜாமீன் மனு இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுபுதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.

எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழக வேட்பாளர்ஜான் பாண்டியனின் தேர்தல் ஏஜென்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தாக்கியதாக பரிதி இளம்வழுதி மீதுபுகார் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்குஉடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பரிதி இளம்வழுதியின் சார்பில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துணை சபாநாயகராக இருந்தேன். எழும்பூர்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

தேர்தலின்போது அ.தி.மு.க. வேட்பாளர் ஜான் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என் மீதும்,தி.மு.கவினர் மீதும் கடும் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. ஆனால்இப்போது என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வேலூர் சிறையில் இருப்பதால் என்னால் எம்.எல்.ஏவாக பதவியேற்க முடியவில்லை. ஜான் பாண்டியன்ஒரு பயங்கர குற்றவாளி. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. நான் பதவியேற்பதற்கு வசதியாக என்னை ஜாமீனில்விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பரிதி இளம்வழுதி.

பரிதி இளம்வழுதி தாக்கல் செய்துள்ள மனு மீது புதன்கிழமை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் முன்பு விசாரணைக்கு வருகிறது. இதில் பரிதி ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+