வரலாறு தெரியாத ஆளுநர் உரை: கருணாநிதி
சென்னை:
வரலாறு தெரியாமல் ஆளுநர் உரை எழுதப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
கவர்னர் உரை குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தத் தேர்தல் முடிவுக்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை என்று ஆளுநர் உரையில் சொல்லப்பட்டுள்ளது.1971ஆம் ஆண்டு தேர்தலில் தனியாக 183 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் 167இடங்களில் தனித்து வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில், அதிமுக, திமுக கூட்டணிகளுக்கிடையே 32 லட்சம் வாக்கு வித்தியாசம்தான் இருந்தது. 1996தேர்தலில் எங்கள் கூட்டணி 70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வரலாறுதெரியாமல் கவர்னர் உரை எழுதப்பட்டுள்ளது.
நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப் போவதாகக் கூறியுள்ளார்கள். திமுக ஆட்சியிலே அரசுஅலுவலர்களுக்கெல்லாம் மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு அளித்ததின் மூலம் எந்தஅளவிற்கு நிதி செலவழிக்கப்பட்டது என்ற விவரங்களும் அதில் சொல்லப்படட்டும்.
நாங்கள் என்ன அவர்களைப் போல அரசு சொத்துக்களை வீட்டுக்கா எடுத்துக்கொண்டு போய் விட்டோம்.எல்லாவற்றையும் மக்கள் நலத் திட்டங்களுக்காகத்தான் செலவிட்டோம். அதையும் அவர்கள் வெள்ளைஅறிக்கையில் தரட்டும்.
வீரப்பன் பிரச்சனை அதிமுக ஆட்சியிலேதான் வந்தது. இப்போது அவர்கள் வீரப்பனைப் பிடித்தால் பாராட்டலாம்என்று கூறினார் கருணாநிதி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications