ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை .. ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், முன்னாள் அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜ் ஆகியோர் மீது ஆதாரப்பூர்வமான புகார்கள் போலீஸில் இருப்பதால் சட்டத்தின்முன் அவர்கள் நிறுத்தப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் செவ்வாய்க்கிழமை பார்வர்ட் பிளாக் உறுப்பினர் சந்தானம் கொண்டு வந்த கவன ஈர்ப்புத்தீர்மானத்திற்குப் பதிலளித்த ஜெயலலிதா, ஸ்டாலின், தா.கிருட்டிணன், தேவராஜ் ஆகியோர் மீது கொலை முயற்சிபுகார்கள் போலீஸில் பதிவாகியுள்ளன. பெங்களூரைச் சேர்ந்த குணாளா என்பவர் இந்த புகார்களைக்கொடுத்துள்ளார்.

இவர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதாக தெரிய வருவதால் 3 பேரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே தேவராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றவர்கள் மீது தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில்அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

அப்போது சபையில் இருந்த மு.க.ஸ்டாலின் எழுந்து, என் மீதான எந்த வழக்கையும் சந்திக்கத் தயார் என்றார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் க.அன்பழகன் எழுந்து, வழக்குகள் குறித்து சட்டசபையில் பேசுவது நீதிமன்றஅவமதிப்பாகும். தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதுகுறித்து சட்டசபையில் பேசுவதுசரியாக இருக்காது என்றார்.

அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் அதுபற்றிப் பேசுவதுநீதிமன்ற அவமதிப்பாக இருக்காது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+