Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண மோசடி: மனோஜ் பிரபாகர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பண மோசடி வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரைகைது செய்யுமாறு உத்தராஞ்சல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைபோலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மனோஜ் பிரபாகர் ஏபேஸ் குரூப் என்ற பெயரில் இயங்கிவரும் ஏபேஸ் சேவிங்ஸ் மற்றும் மியூச்சுவல் பெனிபிட்ஸ்லிமிடெட், ஏபேஸ் இந்தியன் கார்பரேஷன் லிமிடெட், ஏபேஸ் ஹவுசிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட்,ஏபேஸ் பிளான்டேஷன்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் லிமிடெட், ஏபேஸ் மார்க்கெட்டிங் லிமிடெட், ஏபேஸ் நிதி மற்றுபைனான்ஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களின் இயக்குனராக இருந்து வந்ததாக உத்திரபிரதேசத்திலிருந்து வரும்இந்தி செய்தித்தாள் பிரபாகர் மீது குற்றம் சாட்டியிருந்தது.

அவர் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டியிருந்தது.

இந்திய குற்றப்பிரிவு 406 மற்றும் 420ன் கீழ் மனோஜ் பிரபாகர் மீதும் மேலும் இரண்டு பேர் மீதும் சென்ற ஆண்டுமே - ஜுன் மாதங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனாலும் மனோஜ் பிரபாகர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார். தனக்கும் தான் இருந்ததாககூறப்படும் கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் கூறி வந்தார்.

நீதிமன்றத்தால் பல முறை சம்மன் அனுப்பப்பட்டும் பிரபாகர் நீதிமன்றத்திற்கு வராத காரணத்தால் அவரை கைதுசெய்யுமாறு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஹால்வாடி நீதிமன்றம் பிரபாகருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்ததையடுத்து போலீசார்அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

உத்தராஞ்சல், டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீசார் மனோஜ் பிரபாகரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால் அவர்களால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

மனோஜ் பிரபாகர் குடும்பத்தினர் கூறுகையில், பிரபாகர் ஜெய்ப்பூரில் நடக்கும் கருத்தரங்கிற்கு சென்றுள்ளார்.அங்கிருந்து வேறு பல இடங்களில் நடக்கும் கருந்தரங்குகளுக்கும் அவர் செல்லவிருக்கிறார் என கூறினர்.ஆனாலும் அவர் தற்போது எங்கிருக்கிறார் என கூற மறுத்து விட்டனர்.

உத்தராஞ்சல் போலீஸ் டி.ஜி.பி ஏ.கே. ஷரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளிக்கிழமை போலீஸ் குழுஒன்று மனோஜ் பிரபாகரை தேடி கைது செய்ய உள்ளது. அவர்கள் டெல்லி செல்வார்கள் தேவைப்பட்டால்ஜெய்ப்பூருக்கும் செல்வார்கள்.

உத்தராஞ்சல் போலீஸ் மனோஜ் பிரபாகரை தேடி டெல்லிக்கும், ஜெய்ப்பூருக்கும் சென்றனர். ஆனால் அவர்களால்அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

உத்தராஞ்சல் போலீஸ் டெல்லி போலீசை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஏனெனில் பிரபாகர்டெல்லியில்தான் வசித்து வருகிறார். பிரபாகரை கைது செய்யும் முயற்சியில் டெல்லி போலீசின் உதவியும்கோரப்பட்டுள்ளது.

பிரபாகர் ஜெய்ப்பூரில் இருப்பதாக கூறப்பட்டதால் உத்தராஞ்சல் போலீஸ் ராஜஸ்தான் போலீசையும் தொடர்புகொண்டு அவர்கள் உதவியையும் கோரியுள்ளது என்றார்.

பிரபாகரை தேடி போலீஸ் குழு செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி போலீஸ்துணை கமிஷனர் காமராஜ் கூறுகையில் பிரபாகர் தற்போது டெல்லியில் இல்லை என்றார்.

பிரபாகர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கபில்தேவ் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் கூறிபரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியம் குற்றம்சாட்டி அவர் 5 வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+