மறுமணத்துக்கு முயன்று நஷ்ட ஈடு கொடுத்த "மாப்பிள்ளை"

Subscribe to Oneindia Tamil

பாக்வாரா:

2ஆவது திருமணம் செய்ய முயன்றதற்காக, மணப்பெண் வீட்டாருக்கு ரூ.40,000 நஷ்ட ஈடு கொடுத்தார்"மாப்பிள்ளை".

ஹாடியாபாத்தைச் சேர்ந்தவர் தேஸ் ராஜ். தான் ஏற்கனவே திருமணமானவர் என்ற விஷயத்தை மூடி மறைத்த இவர்,2ஆவது திருமணம் செய்ய முயன்றார். சுனிதா ராணி என்பவரைத் திருமணம் செய்வதற்காகவே அவர் மொஹல்லதிப்பி என்ற ஊருக்கு வந்தார்.

மணப்பந்தல், கல்யாண மண்டபம், மணப்பெண் எல்லாம் ரெடி. கல்யாண நாளும் வந்தது. கூடவே ரஞ்சித் கவுர்என்ற பெண்ணும் வந்து சேர்ந்தார். தேஸ் ராஜின் கனவு எல்லாம் சிதறிப் போனது.

தேஸ் ராஜ் ஏற்கனவே தன்னைத்தான் திருமணம் செய்து கொண்டார் என்றும், தங்கள் இருவருக்கும் ஒருகுழந்தையும் இருக்கிறது என்றும் கூறி ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார் ரஞ்சித் கவுர்.

தான் வசமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்று தெரிந்த பிறகும், தேஸ் ராஜ் அலட்டிக் கொள்ளவேயில்லை.ரஞ்சித் கவுர் சொல்வதெல்லாம் பொய் என்று மணப்பெண்ணின் குடும்பத்திடம் கூறி அவர்களைத் தாஜா செய்யமுயற்சித்தார்.

ஆனால், எதற்கு வம்பு என்று நினைத்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் போலீஸாரை வரவழைத்தனர். விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்த போலீஸார், தேஸ் ராஜ் 2ஆவது திருமணம் செய்ய முயற்சித்ததைக் கண்டுபிடித்துவிட்டனர்.

மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும், திருமணத்திற்காகச் செய்தசெலவுகளுக்காகவும் சேர்த்து, அக்குடும்பத்தினருக்கு ரூ.40,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தேஸ்ராஜுக்குப் போலீஸார் உத்தரவிட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+