பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸூக்கு மவுசு கூடுகிறது
கோவை:
இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்குள்ள "மவுசு கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது. மாணவர்கள்பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் பாடத்தின் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
கோவையில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பங்களை வாங்க மாணவர்கள் கூட்டம் அலை மோதுகிறது.ஒவ்வொரு கல்லூரியிலும் கணிசமான அளவில் மாணவர்கள் வந்து விண்ணப்பங்களை வாங்குகின்றனர்.குறிப்பிட்ட ஸ்டார் அந்தஸ்து பெற்ற பல கல்லூரிகளில் சுயநிதி பாடத்திட்டத்திற்கும் அதிக வரவேற்புஏற்பட்டுள்ளது.
கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, எஸ்.என்.ஆர்., சி.பி.எம்.ஆர்.வி.எஸ். கலை அறிவியல்கல்லூரி உட்பட புதிதாகத் துவங்கப்பட்ட கல்லூரிகளிலும், விண்ணப்பங்கள் விற்பனை படு ஜோராக நடக்கிறது.
ஒவ்வொரு விண்ணப்பமும் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள்பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கென விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
மேலும், புதிதாக வந்துள்ள பி.சி.ஏ. எனப்படும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பட்டப்படிப்பு, இன்பர்மேஷன்டெக்னாலஜி ஆகிய படிப்புகள் இருப்பதால், கம்ப்யூட்டர் பட்டப்படிப்பிற்கு பலருக்கும் எளிதாகவே இடம்கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், பல கல்லூரிகள் இந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டாம் எனஅறிவுறுத்துகின்றனர். சாப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்கள் எளிதானமுறையில் பாடங்களை நடத்துகின்றன. இங்கு சேர்ந்து பயில எவ்வித மதிப்பெண்ணோ, பட்டப்படிப்போதேவையில்லை. பணம் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற நிலை உள்ளது.
புதிய சாப்ட்வேர் பட்டப்படிப்புகள் அவ்வப்போது உருவாகி வருவதால், இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகுஎத்தகைய சாப்ட்வேர் முன்னிலையில் இருக்கும் என்பது அறிய முடியாத சூழ்நிலை உள்ளது.
மேலும், அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்ற பலர் நாடு திரும்பிக் கொண்டிருப்பதும், தற்போது தகவல்தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள தொய்வும் பலரையும் யோசனை செய்ய வைத்துள்ளன. மேலும்இன்ஜினியரிங் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, பி.எஸ்சி.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைத் தேர்வு செய்ய பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கல்லூரி பேராசிரியர்களும் ஆசிரியர்களும் கூட பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை சிபாரிசுசெய்வதில்லை. மாற்றாக பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் பாடங்களைப் படிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். இந்தஎலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸும் அடங்கியுள்ளது. பிற்காலத்தில் பல்வேறுமேற்பட்டப்படிப்பிற்கு இது எளிதாக இருக்கும் என அவர்கள் வழிகாட்டுகின்றனர். இதன் மூலம் எம்.எஸ்சி.எலெக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்றபடிப்புகளுக்குச் செல்லலாம் என்றும் கூறுகின்றனர்.
எப்போதும் நிரந்தரமாக இருக்கும் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்திட்டங்களில் மாணவர்கள்அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், அதுதான் எப்போதும் நிரந்தரம் என ஆசிரியர்கள் பலர் கூறுகின்றனர்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை தனது மகளோ, மகனோ, கம்ப்யூட்டர் பாடத்திட்டத்தில் படிப்பதையேபெருமையாக நினைக்கின்றனர். எனவே, கம்ப்யூட்டர் பாடத்திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்கள் தங்களின் எதிர்காலம்எப்படி இருக்கும் என்பதைப் பற்றி யோசிக்கத் துவங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications