திமுகவுடன் கூட்டணி தொடரும்: பா.ஜ.க. திட்டவட்டம்
கோவை:
திமுகவுடனான கூட்டணியிலிருந்து விலக வேண்டிய தேவையோ, அவசியமோ, சூழ்நிலையோ இப்போது இல்லை, அதே சமயம்அதிமுகவுடன் அரசியல் உறவு வைத்துக் கொள்ள கற்பனை கூட இல்லை என கோவையில் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின்பொதுச் செயலர் இல. கணேசன் கூறினார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடை பிடிக்கவில்லை என்பதுமகிழ்ச்சியளிக்கிறது. பிரதமருடன் மரியாதை நிமித்தமாக அவர் சந்திக்கச் சென்றதும் வரவேற்புக்குரியதே.
தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிமுக முனைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக கோவையில் இஸ்லாமிய தீவிரவாதிகள்கைது செய்யப்பட்டு குண்டு வெடிப்பு விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நடத்த வேண்டியது இந்தஅரசின் பொறுப்பாக உள்ளது.
தமிழ்த் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனைத்துஉதவிகளையும் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே இதற்கான உறுதியை அளித்துள்ளார்என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மத்திய அரசுடன் மாநில அரசு கொண்டுள்ள உறவு ஆட்சிக்கும்-ஆட்சிக்கும் உள்ள உறவாக இருக்க விரும்புகிறேன்.கட்சிக்கும்-கட்சிக்கும் உள்ள உறவாக இது இருக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழக ஆளுநர் மீது பா.ஜ கூறிய கருத்திற்கு வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகள்சரியானவை அல்ல. தமிழக மக்களுக்கு ஆளுநர் மீது இருந்து வந்த நம்பிக்கை குறைந்து வருகிறது.
தேர்தலுக்குப் பிறகு மதிமுகவுடன் எவ்வித கருத்தும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை.
கிருஷ்ணா நதி நீர் குறித்து ஜெ. கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆந்திர அரசும் தக்க பதில் அளித்துள்ளது. இந்தப் பதில் குறித்து ஜெ.தெளிவான அறிக்கை ஒன்றை அவையில் விளக்க வேண்டும்.
கடந்த 20 நாள் ஆட்சியில் ஜெ. பழிவாங்கும் நோக்கில் நடந்து கொண்டு வருகிறார் என்பது தெளிவாகியுள்ளது. இதே நிலைநீடித்தால் ஆட்சிக்கும் அந்தக் கட்சிக்கும் நல்லதல்ல. அரசு அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
வீரப்பனைப்பிடிக்க தேவாரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மீண்டும் முயற்சித்து வெற்றி பெறவாழ்த்துக்கள்.
காவிரிப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது. அதை வலியுறுத்தி அமல்படுத்த வேண்டியது இந்த அரசின் கடமை. அதைசெயல்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications