தமிழக கவர்னரை நீக்க கோருகிறது திமுக
சென்னை:
தமிழக கவர்னர் பாத்திமா பீவியை திரும்ப அழைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி திமுகபொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில்திங்கள்கிழமை மாலை நடந்தது.
பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்படஏராளமான திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தோர் மீது தொடரப்படும் வழக்குகளை நடத்துவதற்குமாவட்டங்களில் வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட வேண்டும்.
2. திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மதுரை திமுகபிரமுகர் தனுஷ்கோடி குடும்பத்தாருக்கு திமுக உரிய நிதியுதவி வழங்க வேண்டும்.
3. பொதுமக்களுக்கு நீதி வழங்க வேண்டிய காவல் துறையை கட்டவிழ்த்து விட்டு கழகத் தோழர்களை பழிவாங்கும்ஜெயலலிதாவை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
4. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்காத காரணத்தால் கட்சியை விட்டு விலகி சுயேச்சையாகப்போட்டியிட்டவர்களை கட்சியிலிருந்து விலக்க திமுக நடவடிக்கை எடுக்கும்.
5. ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். மேலும்பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கவும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
6. திமுக கூட்டணியின் தோல்வி கண்டு தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்வெ.முத்து, பொள்ளாச்சி அய்யம்பாளையம் நாகராஜ் ஆகியோர் குடும்பங்களுக்கு உரிய உதவிகள்அளிக்கப்படும்.
7. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.எல்.ஏ.வாக ஆக முடியாத ஜெயலலிதாவை கவர்னர் பாத்திமா பீவிமுதல்வாகப் பதவியேற்கும்படி அழைத்துள்ளார். இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்ட கவர்னரைமத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.
8. கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு வரவேயில்லை என்று ஜெயலலிதா பேரவையில் கூறினார். இது தவறானகுற்றச்சாட்டு என்று கூறி இதற்குப் போதுமான ஆதாரங்களைக் காட்டியும் அதை அதிமுக அரசு மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி கிருஷ்ணா நதிநீர்ப்பிரச்சனையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கும் பங்குண்டு என்றுகூறியுள்ளது. இதற்கு ஆந்திர முதல்வரும் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் செயலை கண்டிக்கிறோம்.
9. ஜெயலலிதாவுக்கு பதவி வந்ததும் கஜானாவை திமுக காலி செய்து விட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதை திமுக பொதுக்குழுக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
10. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் அவர்களால்வாக்களிக்க முடியாமல் போனது. இதுபோன்ற வாக்குச் சீட்டுக்களில் பெயர் இல்லாத தவறுகள் எதிர்காலத்தில்நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications