அறுவை சிகிச்சை: வாஜ்பாய் நாளை மும்பை பயணம்
மும்பை:
மூட்டு அறுவை சிகிச்சைக்காக பிரதமர் வாஜ்பாய் மும்பையிலுள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனைக்கு புதன்கிழமைவருகிறார்.
அவருக்கு ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் வியாழக்கிழமை அறுவை சிகிச்சை நடக்கிறது.
மும்பையிலுள்ள சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் பிற்பகல் 12 மணிக்கு அவர் வந்தவுடன், நேராக ப்ரீச்கேன்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் வாஜ்பாய்க்கு செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. இந்தக் கால்அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை ஒரு மணி நேரம்நடத்தப்படுகிறது.
வாஜ்பாய்க்கு கடந்த அக்டோபர் மாதம் 10 ம் தேதி நடந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட நியுயார்க் டாக்டர்சித்தரஞ்சன் ரனவதேதான் இப்போதும் அறுவை சிகிச்சை செய்யவுள்ளார்.
பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்யும் அவர் செவ்வாய்க்கிழமை மும்பை வந்து சேர்ந்தார். இவர் பிரதமர்வாஜ்பாய் தவிர மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட 3,200 க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை செய்தவ என்பதுகுறிப்பிடத்தக்கது.
ப்ரீச் கேன்டி மருத்துவமனை பொது மேலாளர் கூறுகையில், மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக பிரதமர்வாஜ்பாய் எங்கள் மருத்துவமனையை தேர்ந்தெடுத்ததற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
அவருக்கு இங்கே கடந்த முறை நடந்தது போல் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று டாக்டர் நந்து லாட்தெரிவித்தார். கடந்த முறை பிரதமர் வாஜ்பாய்க்கு டாக்டர் சித்தரஞ்சன் அறுவை சிகிச்சை செய்த போது இவர்உடனிருந்து வழிகாட்டியவர்.
ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் உள்ள 7 வது மாடியில் 13 அறைகளும், 6 வது மாடியில் 2 அறைகளும் பிரதமர்வாஜ்பாய்க்காகவும், அவரது உதவியாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சைக்காக மும்பை வரும் பிரதமர் வாஜ்பாயுடன் மகாராஷ்டிரா பாஜக தலைவர் வினோத் தாவ்டே,மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, அகில இந்திய பாஜக துணைத் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் துணைமுதல்வருமான கோபிநாத் முன்டே ஆகியோர் வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் பிரதமரின் மும்பை வருகையையொட்டி முன்னதாகவேமும்பை சென்றுள்ளார். பிரதமர் மும்பை வருவதையொட்டி மும்பை நகரில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ப்ரீச் கேன்டி மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய்க்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புபவர்கள், ஞ்ஞுணாதீஞுடூடூச்ணாச்டூஞ்டிஞிணிட்ணஞுணாடிணஞூணிணாஞுஞிட.ஞிணிட் என்ற முகவரியில்வாழ்த்துக்களை அனுப்பலாம் என்று மருத்துவமனை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications