ஜெ.முதல்வரானதை எதிர்த்து வழக்கு: ஜூன் 11ல் விசாரணை
சென்னை:
ஜெயலலிதா தமிழக முதல்வரானதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொதுநலன் கருதி தொடர்ந்த மனு மீதான விசாரணை ஜூன் 11 ம் தேதி நடத்தப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில்போட்டியிடும் தகுதியையே இழந்து விட்டார். இந்த நிலையில் அதிமுக கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றதுஎன்பதற்காக ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடாது.
சட்ட விதிமுறைகளைப் புறக்கணித்து ஜெயலலிதா தமிழக முதல்வரானதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி.
இதற்கிடையில் சுவாமி புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்துக்குச் சென்று ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்துதான் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீதிபதிகள் ஜெயின் மற்றும் தங்கவேல் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இந்த மனு மீதான விசாரணைதிங்கள்கிழமை நடக்கும் என்று தெரிவித்தது.
ஜெயலலிதா தமிழக முதல்வரானதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுமீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நேரத்தில் டான்சி நிலப்பேர ஊழல் மற்றும் பிளசன்ட் ஸ்டே ஊழல் வழக்குகளை ரத்து செய்யும்படிஜெயலலிதா மேல்முறையீடு செய்துள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார் சுவாமி. இதற்கு தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் கேட்டுக்கொண்டது.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications