பா.ஜ. கூட்டணியில் சேரமாட்டேன்: ஜெ
டெல்லி:
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சேரும் உத்தேசம் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாடெல்லியில் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மரியாதை நிமித்தமாக பிரதமர் வாஜ்பாய், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்சோனியா காந்தி ஆகியோரை செவ்வாய்க்கிழமை டெல்லி சென்று சந்தித்தார் ஜெயலலிதா.
இந்த சந்திப்புக்குப்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அதிமுக சேரும் வாய்ப்புக்கள் உள்ளது என்று பல பத்திரிக்கைகளில் செய்திகள்வெளியாகியுள்ளன. இந்த செய்திகளில் சிறிதளவும் உண்மையில்லை.
அதிமுக தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டணி நீடிக்குமா என்றுகேட்கிறார்கள். தற்போது மீண்டும் தேர்தல் வரும் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் இதுபோன்ற கேள்விகள்தேவையில்லாதது.
ஜோதிபாசு தலைமையிலான மக்கள் முன்னணியில் அதிமுக சேர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதுகுறித்துபேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மேலும் இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சோனியா காந்தியை சந்தித்துப் பேசியதில் அரசியல் முக்கியத்துவம் எதுவுமில்லை. நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து பேசிக் கொண்டோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் நான் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுகுறித்து வெவ்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். தனிமனிதர்களின் விருப்பு,வெறுப்புக்களுக்கெல்லாம் நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்என்பது பற்றி மட்டுமே நான் கவலைப்படுவேன் என்றார்.
முன்னதாக, தமிழக மீனவர்கள் பிரச்சனை, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை, தமிழக வேளாண்துறைக்கு உலக வர்த்தக அமைப்பு மூலம் கிடைக்க வேண்டிய உதவி உள்பட பல பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம்மனுக் கொடுத்தார் ஜெயலலிதா. தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டபின் அவர் டெல்லிசெல்வது இதுவே முதல்முறை.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications