ஸ்டாலின் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை:
சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மகாபலிபுரம் சாலை அமைப்பது தொடர்பாக ரூ 1 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக காண்டிராக்டர்தெய்வசிகாமணி போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக முன்னாள் எம்.பி. பரசுராமன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில்வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கிருட்டினன், முன்னாள் எம்.பி. பரசுராமன், ஸ்டாலினின்உதவியாளர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஸ்டாலினும்,கிருட்டினனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த வழக்கு முதலில் சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்குசிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திமுகவினர் மீது சிபிசிஐடியினர் விசாரிக்கும் முதலாவது வழக்கு இது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவது கூட்டத்தொடரிலேயே பேரவையில் இவ்வழக்கு பற்றி முதல்வர்ஜெயலலிதா விளக்கினார். இவ்வழக்கை சந்திக்கத் தயார் என்று பேரவையிலேயே ஸ்டாலினும் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications