நேபாளத்தை தவிர்க்கும் சுற்றுலா பயணிகள்
டெல்லி:
நேபாளில் மன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும்அங்கு செல்வதற்கு யோசனை செய்வதாக கூறப்படுகிறது. ஆனாலும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ்நிறுவனத்தாரும், விமானத்துறை அதிகாரிகளும் அதிகபட்சமான பாதிப்பு ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.
இது குறித்து நோபாள ஹவுஸ் டூர்ஸ் பிரைவேட் லிட் என்ற சுற்றுலா பயணிகளை நேபாளத்திற்கு அனுப்பி வரும்டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் ஜெயின் என்பவர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவிலிருந்தும்,ஹாலந்திலிருந்தும் வரவிருந்த பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.
இதில் 3 பயணிகள் குழுக்கள் அடங்கும். இவர்கள் இந்தியா வந்துவிட்டு பின்னர் நேபாளம் செல்லவிருந்தார்கள்.நேபாளத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள் பயணத்தை தற்போது ரத்துசெய்துள்ளனர்.
டெல்லியிலிருக்கும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் தற்போது யாரும் காத்மாண்டு செல்லவேண்டாம் என தங்கள் வாடிக்கையாளர்களிடம் கூறி வருகிறார்கள்.
சீதா வோர்ல்ட் டிராவல்சின் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் காத்மாண்டு நிலைமையை கண்காணித்துவருகிறோம். இன்னும் 15 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என வாடிக்கையாளர்களிடம் கூறி வருகிறோம்என்றார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ஏர்பஸ் 320 டெல்லியிலிருந்தும், கோல்கத்தாவிலிருந்தும் தினமும்காத்மாண்டுவிற்கு இயக்கப்பட்டு வருகிறது இரன்டு நாட்களாக பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது248 இருக்கைகள் கொண்ட விமானத்தில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.
ஜுன் மாதம் 2ம் தேதி பல பயணிகளும் காத்மாண்டு செல்ல விரும்பினர். ஆனால் அதன் பின்பு பயணிகள் யாரும்அங்கு செல்ல அதிக ஆர்வம் காட்டவில்லை. பயணிகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது என கூறினர்.
வாரம்தோறும் 11 விமானங்களை டெல்லியிலிருந்தும், 3 விமானங்களை மும்பையிலிருந்தும், 2 விமானங்களைபெங்களூரிலிருந்தும் இயக்கும் ராயல் நேபாள் ஏர்லைன்ஸ், தங்களுத்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.எப்போதும் போல் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது.
மன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்ட இரண்டாவது நாளன்று பயணிகள் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.சில தொழில்நுட்ப கேளாறு காரணமாக திங்கள்கிழமை விமானத்தை இயக்க இயலவில்லை.
சில பயணிகள் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமிருந்த அனைத்துபயணிகளையும் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்ததால் செவ்வாய்க்கிழமை விமானம் தாமதமாக கிளம்பியது.புதன்கிழமை முதல் விமான சேவை வழக்கம் போல் தொடரும் என கூறினர்.
இந்தியர்கள் நேபாளம் செல்வதற்கும், நேபாளர்கள் இந்தியாவிற்கு வருவதற்கும் எந்த விதமான கட்டுப்பாடும்கிடையாது. 1999ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட பின்பு சில கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்தியாவிலிருந்து நேபாளம் வரும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து ஆண்டு தோறும் 6 முதல் 7சதவிகிதம் அதிகரித்து வருகிறது என நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 491, 504 ஆகும். இதில் 140, 661 பேர் இந்தியர்கள்என தூதரக அதிகாரிகள் கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications