காஷ்மீரில் 18 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மே 31 ம் தேதியுடன் சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில்புதன்கிழமை நள்ளிரவு ராணுவ வீரர்கள், 18 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்று அடையாளம்காணப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீர் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைஅருகேயுள்ள போலீஸ் நிலையத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து போலீஸ் கான்ஸ்டபிள்கள் குலாம் ரசூல் மற்றும்அலி முகமது ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து ராணுவ வீரர்கள் அப்பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று தீவிரவாதிகளைத் தேடினர். அப்போதுகாஷ்மீரின் வடக்குப்பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேகடும் சண்டை ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
டாங்க்மார்க் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தினர்.
பாரமுல்லா பகுதியில் உள்ள அனந்தநாக் பகுதியில் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகளுடன்சுற்றிக்கொண்டிருந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதே போல் தோடா மாவட்டத்தில் உள்ள உதய்ப்பூரில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
சூரன்கோட்டே பகுதியில் 5 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர்களிடமிருந்து துண்டுபிரச்சாரங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
இதே போல் பூஞ்ச் மாவட்டம் சாவ்ஜியான், செச்சியான் மற்றும் காச்சர்வான் பகுதிகளில் ராணுவ வீரர்கள் நடத்தியதாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்றுஅடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுதவிர வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த மே 31 ம் தேதியிலிருந்து இதுவரை ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications