இளம் தலைமுறைக்கு "கோவையின் எடிசன்" ஜி.டி. நாயுடுவை கொண்டு செல்லும் GDN!

Subscribe to Oneindia Tamil

கோவை: ஒவ்வொரு தலைமுறையும் தனது ஹீரோக்களை வெவ்வேறு வழிகளில் கண்டுபிடிக்கிறது. சிலர் புத்தகங்கள் மூலம் அறிகிறார்கள். சிலர் பள்ளி வகுப்பு அறைகளில் அவர்களைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள். அதன்படி இன்றைய காலத்தில் பலர் திரைப்படங்கள் மூலமாகவே வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களை பற்றி அறிந்து கொள்கிறார்கள். இதன் காரணமாகவே வரவிருக்கும் "G.D.N." திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த திரைப்படம் கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை முன்னோடி என பல முகங்களை கொண்ட ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகிறது. கோவையை இந்தியாவின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாக மாற்றியதில் அவரது பங்களிப்பு மிக பெரியது.

GD Naidu

ஜிடி நாயுடு

1893ஆம் ஆண்டு பிறந்த ஜி.டி. நாயுடு, சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் மீது அசாதாரண ஆர்வம் கொண்டிருந்தார். எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதை கூர்மையாக கவனித்து, அதை கடின உழைப்பின் மூலம் சரி செய்து, தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார்.

அவரது கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருந்தது. யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் மூலம் பேருந்துப் போக்குவரத்து முறையில் புரட்சியை ஏற்படுத்தினார். மேலும், தனது பொறியியல் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தார். அவர் பெரிதாக படிக்கவில்லை என்றாலும் கூட கல்வித் துறையில் புதுமை சிந்தனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைத்தார்.

விடா முயற்சி

விடாமுயற்சியின் மூலம் உலகின் சிறந்த நாடுகளுடன் போட்டியிட முடியும் என்ற அவரது உறுதியான நம்பிக்கையே அவரது சிந்தனைகளின் அடிப்படையாக இருந்தன. அந்த தொலைநோக்கு பார்வை இன்றுமே கூட பல தொழில்முனைவோர்கள், பொறியாளர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்து வருகிறது.

அவரது வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த டிரைகலர் ஃபிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனங்கள், ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கை பயணத்தை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்துள்ளன.

மாதவன்

இந்தப் படத்தில் நடிகர் ஆர். மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் கதாபாத்திரங்களுக்கு திரையில் உயிர் கொடுக்கும் நடிகராக மாதவன் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். அவரது "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் முக்கிய ஆளுமையாக இருந்த ஜிடி நாயுடுவாகவே இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். இதில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படம், இந்தியாவின் மிக சிறந்த தொழில்துறை ஆளுமைகளில் ஒருவரான நாயுடுவின் வாழ்க்கையை உண்மைத்தன்மையுடனும் பிரம்மாண்டத்துடனும் திரையில் கொண்டு வர முயல்கிறது.

G.D.N

"G.D.N." திரைப்படத்தை மற்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. இது வெறும் கண்டுபிடிப்புகளை மட்டும் மையமாகக் கொண்ட திரைப்படமல்ல. ஆர்வம், விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையால் தனது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை கண்டுபிடித்த ஒரு மனிதரின் ஆளுமையையும் இந்த படம் ஆராய்கிறது.

புதுமையான கதைகள் இன்றைய இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் நிலையில், "G.D.N." ஒரு மிக சிறந்த அனுபவத்தை நமக்கு தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பலருக்கும் இந்த திரைப்படம் தான் ஜி.டி. நாயுடுவை முதன்முறையாக அறிமுகப்படுத்தும். மற்றவர்களுக்கு ஒரு மனிதரின் சிந்தனைகளும் முயற்சிகளும் எப்படி பல தலைமுறைகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டும். அப்படியொரு மகத்தான ஆளுமையின் சாதனைகளை கொண்டாடும் வாய்ப்பாக இந்த படம் இருக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+