ஆதவ் அர்ஜுனா - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணம் என்ன? ஓபனாக பேசிய பெரியம்மா திலகவதி
சென்னை: டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சியில் பயணிப்பதும், ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணித்து வருவதும் ஆதவ் - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மாவுமான திலகவதி கூறியுள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு மகன் உள்ளார்.

கடந்த மே மாதம் ஆதவ் அர்ஜூனா அமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது மனைவி டெய்சி பங்கேற்று இருந்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்களது இல்வாழ்வில் இன்று திடீரென புயல் வீசியுள்ளது. அதாவது, 14 ஆண்டுகால திருமண பந்தத்தினை ஆதவ் அர்ஜூனா - டெய்சி தம்பதியினர் முடித்துக்கொள்வதாக இன்று அறிவித்துள்ளனர்.
பெரியம்மா திலகவதி கருத்து
ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றும் வெளியாகியிருந்தது. ஆதவ் அர்ஜுனா - டெய்சி பிரிவதாக அறிவித்தது இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதற்கிடையே, ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மாவும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஆதவ் - டெய்சி பிரிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் திலகவதி கூறியதாவது:-
டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சியில் பயணிப்பதும் ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணித்து வருவதும் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை. தனியுரிமையை மதிக்க வேண்டும். இருவரும் நண்பர்களாகவே பிரிகிறார்கள்.. என்று கூறினார்.
பிரிவாதாக அறிவித்த டெய்சி
ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக இன்று அவரது மனைவி டெய்சி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் கூறியதாவது:- 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்வில் இணைந்து பயணித்தோம். அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த அந்த பயணத்தில் நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களை கடந்து வந்தோம்.
தற்போது ஆதவ் அர்ஜுனாவும், நானும் தம்பதிகளாக இணைந்து வாழ்வதை முடிவுக்கு கொண்டு வந்து, தனித்தனியான பாதைகளில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். இது எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தாலும், எங்களது குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், பிள்ளையின் மகிழ்ச்சி மற்றும் நலனை உறுதி செய்வதிலும் எங்களது அர்ப்பணிப்பு எப்போதும் முக்கியமானதாக இருக்கும்.
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி
ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன். எங்களது தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளித்து ஒத்துழைப்பையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது.
ஆதவ் அர்ஜுனா தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார். இதனால், ஆதவ் அர்ஜூனாவை அவரது பெரியம்மாவும், தமிழக முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி மற்றும் குடும்பத்தினர் வளர்த்தனர். லாட்டரி அதிபரான சான்டியாகோ மார்டின் மகள் டெய்சியை காதல் திருமணம் செய்து கொண்டார் ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் டெய்சியின் தாயாருமான லீமா ரோஸ், லால்குடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளார்.




Click it and Unblock the Notifications
