Sonia Gandhi: இந்திரா காந்தியை பார்த்தாலே பயப்படுவேன்.. ராஜீவ் இறந்ததும்! சோனியா பேசும் போது உன்னிப்பாக கவனித்த விஜய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய சுய சரித நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய சோனியா காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பார்த்து பயப்பட்டதாகவும், அவரது வலிமை, கோபம் என் தந்தையை நினைவுப்படுத்தியதாகவும் கூறினார். கடும் கோபக்காரரான இந்திரா காந்தி ராகுல், பிரியங்கா பிறந்த பிறகு மென்மையாகிவிட்டார் என்றும் கூறினார். இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய் சோனியா காந்தி பேசுவதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார்.

சோனியா காந்தி தனது வாழ்க்கை அனுபவங்களை belonging a journey of love என்ற பெயரில் சுயசரிதை நூலாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய்யுடன், அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Sonia Gandhi recalls terrified of Indira Gandhi when she first joined family- Vijay Listening carefully


கடும் கோபக்காரர் இந்திரா காந்தி

ஐடிசி ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் சோனியா காந்தி புத்தகத்தை வெளியிட்டார். அப்போது இந்த புத்தகம் எழுதியது குறித்த பழைய நினைவுகளை பகிர்ந்தார். நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசியதாவது:- என் சுயசரிதை புத்தகத்திற்கு மக்கள் இடையே அதிக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த புத்தகத்தை எழுத தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம், பல விஷயங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதில் பல முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடும் கோபக்காரர். இதனால் அவரிடம் எப்படி பேசுவது என தயங்கி இருக்கிறேன். ராஜீவ் காந்தியை திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்தபோது, இந்திரா காந்தியை அம்மா என அழைக்க தயங்கினேன்.

ராகுலும், பிரியங்காவும் பிறந்த பிறகு..

என் கணவர் ராஜீவும், அவரது சகோதரர் சஞ்சய்யும் அம்மா என்று அழைப்பதால், நானும் அப்படியே அழைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. ஆனால் முதலில் அம்மா என அவரை கூப்பிடவே இல்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது குணங்கள் என்னை அம்மா என அழைக்க வைத்தது. இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகே அவ்வாறு அழைத்தேன்.

ஆரம்பத்தில் நான் அவரைப் பார்த்து பயந்தேன். ஏனென்றால் அவரது கோபம் என் தந்தையை நினைவுப்படுத்தும். கடும் கோபக்காரர், வலிமையானவர்.. என இருந்த இந்திரா காந்தி, ராகுலும், பிரியங்காவும் பிறந்த பிறகு மென்மையாகிவிட்டார்.

உற்று கவனித்த முதல்வர் விஜய்

என் கணவர் ராஜீவ் காந்தி முதன் முதலில் அரசியலுக்கு வருவதை எதிர்த்தேன். அவர் அரசியலில் மும்முரமாகிவிட்டால் அவரை இழந்துவிடுவேனோ என நினைத்து பயந்தேன். ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு அப்படியே நான் நிலைகுலைந்துபோனேன். ராஜீவ் மரணத்திற்கு பிறகு அவரது தொகுதிக்கு நான் மக்களை சந்திக்க சென்ற போது தான், 'நான் இந்த இடத்தை சேர்ந்தவள் என்று" எனக்குள் நான் உணர்ந்தேன்.. என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விஜய் சோனியா காந்தி பேசுவதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார். ராகுல் காந்திக்கு அருகே முதல் வரிசையில் விஜய்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதே போன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இரண்டாம் வரிசையில் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+