முதல்வர் விஜய் என நினைத்து ஸ்டாலினை பார்த்து கை காட்டிய சிறுவர்கள்.. நீலாங்கரையில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் என நினைத்து முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சிறுவர், சிறுமிகள் கை காட்டிய நிகழ்வு சென்னை நீலாங்கரையில் நடந்துள்ளது. முதல்வர் விஜய் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் காரில் புறப்பட இருந்த நிலையில் அதற்காக பாதுகாப்புக்கு வழிநெடுக போலீசார் நின்றனர். இதனால் விஜய் வருவார் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை ஓரம் காத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த நேரம் பார்த்து அதே சாலையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ காரில் வந்தததால் சாலை ஓரம் விஜய்யை காண காத்திருந்த சிறுவர், சிறுமிகள் முதல்வர் விஜய் என நினைத்து கை காட்டினர்.

MK Stalin mistaking the person in the car TN Chief Minister Vijay

சென்னை நீலாங்கரையில்

தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நாள்தோறும் தலைமை செயலகம் சென்று வருகிறார். விடுமுறை நாட்கள் நீங்கலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9.30 மணிக்கு தலைமை செயலகம் வந்துவிடும் விஜய், மாலை 4 மணி வரை அலுவல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நீலாங்கரை வரை உள்ள 29 கிமீ தொலைவுக்கு தினமும் விஜய் காரில் பயணித்து வருகிறார். முதல்வர் விஜய்யை காண வழிநெடுக பொதுமக்களும் அவரது ரசிகர்களும் காத்து இருப்பதை பார்க்க முடியும். விஜய்யும் தன்னை காண வந்தவர்களை பார்த்து கை அசைத்துவிட்டு செல்வார். இதனால் முக்கிய சந்திப்புகளில் விஜய்யை காண பொதுமக்கள் கூட்டம் எப்போதுமே இருப்பதை பார்க்க முடிகிறது.

விஜய் வரப்போகிறார் என..

அந்த வகையில் முதல்வர் விஜய் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் காலையில் வீட்டில் இருந்து ஏர்போர்ட்டிற்கு சென்றார். முதலவர் விஜய் கிளம்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அவரது கார் கன்வாய் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் பயணிப்பதற்காக சாலையின் ஒரு பக்கத்தில் போலீசார் வழி ஏற்படுத்தி வைப்பார்கள்.

அதேபோல போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வழி நெடுக நிறுத்தப்பட்டு இருப்பார்கள். இந்த நிகழ்வுவள் நடக்கவும் விஜய் வரப்போகிறார் என்று அறிந்து கொண்டு அவ்வழியாக செல்லும் மக்கள் பலரும் விஜய்யை காண காத்திருப்பது வழக்கம். அந்த வகையில்தான் இன்று சென்னை நீலாங்கரையில் விஜய்யை பார்க்க சிறுவர்களும் பெரியவர்கள் என பாரபட்சம் இல்லாமல் பார்க்க திரண்டு இருந்தனர்.

விஜய் என நினைத்து கை காட்டிய சிறுவர்கள்

விஜய் கார் கன்வாய் வருகை தருவதற்கு முன்பாக, சிறிது நேரத்திற்கு முன்பாக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் அதே ரூட்டில் தனது பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வருகை தந்தார். நீலாங்கரையில் உள்ள தனது மகன் உதயநிதி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், பின்னர் தனது ஆழ்வார்பேட்டை இல்லம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

மு.க ஸ்டாலின் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் வந்த நிலையில், விஜய்தான் வருகிறார் என நினைத்த சிறுவர், சிறுமிகள், அவரது ரசிகர்கள் ஸ்டாலினை பார்த்து கை காட்டினர். பின்னர் காரில் செல்வது ஸ்டாலின் என தெரிந்த பிறகு கை காட்டுவதை நிறுத்தினர். அதே நேரத்தில் ஸ்டாலினை பார்த்த மகிழ்ச்சியில் சிலர் அவருக்கு கை காட்டியதையும் தங்கள் செல்போனில் படம் பிடித்ததையும் பார்க்க முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+