இந்தியாவின் மிக நீளமான காற்றாலை டர்பைன் இறக்கைகள் உற்பத்தியை தொடங்கியது அதானி விண்ட்!
அகமதாபாத்: அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ANIL), குஜராத் மாநிலம் முந்த்ராவில் அமைந்துள்ள தனது ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையில், இந்தியாவிலேயே மிக நீளமான 91.2 மீட்டர் காற்றாலை டர்பைன் இறக்கையின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
மேலும், தனது MWL185-5.0 மெகாவாட் காற்றாலை தளத்திற்கான சான்றிதழையும் அதானி விண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்தக் காற்றாலை டர்பைன் பிளேடுகளைத் தொடர்ச்சியாகப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

91.2 மீட்டர் நீளமுள்ள இந்த இறக்கைகள், இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட காற்றாலை டர்பைன் இறக்கைகளிலேயே மிக நீளமானவை MWL185-5.0 மெகாவாட் காற்றாலை தளத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த இறக்கைகள், இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவான 185 மீட்டர் சுழலி விட்டம் கொண்ட காற்றாலையில் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தக் காற்றாலையின் மையக்கூடு (Hub) 140 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும்.
இதன் சுழலி சுழலும் பரப்பளவு சுமார் 26,600 சதுர மீட்டர். இது கால்பந்து மைதானங்களின் பரப்பளவைவிட மூன்றரை மடங்கு அதிகமாகும். MWL185-5.0 மெகாவாட் காற்றாலை தளம், மாறுபட்ட காற்றின் வேகங்களிலும் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீரான மின்சார உற்பத்தி, கிடைக்கக்கூடிய காற்று வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த திறன் பயன்பாட்டுக் காரணி (CUF) மேம்பாடு ஆகியவை சாத்தியமாகின்றன.
இந்தப் புதிய இறக்கையின் அறிமுகம், முந்த்ரா ஆலையில் தயாரிக்கப்படும் காற்றாலை உதிரிபாகங்களின் தயாரிப்பு வரிசையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போது அந்த ஆலையில் 78.6 மீட்டர் மற்றும் 80.5 மீட்டர் நீளமுள்ள காற்றாலை இறக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 91.2 மீட்டர் நீளமுள்ள இறக்கைகளைத் தயாரிக்கும் நிலைக்கு முன்னேறியிருப்பது, இறக்கை வடிவமைப்பு, பொருட்கள் பொறியியல், உற்பத்தித் துல்லியம் மற்றும் மிகப்பெரிய உதிரிபாகங்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அடுத்த தலைமுறை காற்றாலை டர்பைன்களுக்குத் தேவையான பெரிய அளவிலான உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இந்தியாவின் திறனையும் இது வலுப்படுத்துகிறது.
இதுகுறித்து அதானி விண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மிலிந்த் குல்கர்னி கூறுகையில், "இந்தியாவிலேயே மிக நீளமான காற்றாலை டர்பன் இறக்கையைத் தயாரிப்பதும், எங்களது 5 மெகாவாட் காற்றாலை தளத்திற்கான சான்றிதழைப் பெறுவதும், அதானி விண்ட் நிறுவனத்திற்கும் நாட்டின் காற்றாலை உற்பத்தித் துறைக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளன.
பெரிய அளவிலான இறக்கைகளும், அதிக உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகளும், ஒவ்வொரு காற்றாலை இயந்திரமும் அதிக அளவிலான ஆற்றலைப் பெறுவதற்கு உதவுகின்றன. குறைந்த காற்று வேகம் நிலவும் இடங்களிலும் அதிக ஆற்றலைப் பெற முடியும். இதன் மூலம் காற்றாலை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தக்கூடிய புவியியல் பகுதிகளை மேலும் விரிவுபடுத்த முடியும்.
இந்தியாவின் அதிகரித்து வரும் தூய்மை எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மேம்பட்ட காற்றாலை தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்கி உற்பத்தி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்." எனத் தெரிவித்தார்.
ஒரு காற்றாலை யின் மின்சார உற்பத்தி, அதன் சுழலி சுழலும் பரப்பளவு, நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தித் திறன், மையக்கூட்டின் உயரம் மற்றும் அந்த இடத்தில் கிடைக்கும் காற்று வளம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.
MWL185-5.0 மெகாவாட் காற்றாலை தளம், சுமார் 185 மீட்டர் சுழலி விட்டத்தையும், ஏறத்தாழ 26,600 சதுர மீட்டர் சுழலும் பரப்பளவையும் கொண்டுள்ளது. குறைந்த மற்றும் மிதமான காற்று வேகம் நிலவும் பகுதிகளிலும் அதிக அளவிலான ஆற்றலைப் பெறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், காற்றாலை மின்சாரத் திட்டங்களை அமைப்பதற்குத் தொழில்நுட்ப ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சாத்தியமான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
காற்றாலைகளின் சோதனை மற்றும் சான்றளிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஜெர்மனியைச் சேர்ந்த சுயாதீன நிறுவனமான விண்ட்கார்ட் சர்டிபிகேஷன் ஜிஎம்பிஹெச் (WindGuard Certification GmbH), அதானி விண்ட் நிறுவனத்தின் MWL185-5.0 மெகாவாட் காற்றாலை டர்பைன் தளத்திற்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலம் முந்த்ராவில் அமைந்துள்ள தளத்தில், இந்தக் காற்றாலையின் மாடல் இயந்திரம் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
MWL185-5.0 மெகாவாட் காற்றாலை, அதானி விண்ட் நிறுவனத்தின் ஜெர்மன் தொழில்நுட்பக் கூட்டாளியான W2E (Wind to Energy) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
காற்றாலை டர்பைன்களின் வடிவமைப்பு, சோதனை மற்றும் உற்பத்திக்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட IEC 61400 தரநிலைகளின் தொகுப்பிற்கு இந்தக் காற்றாலை தளம் இணங்குவதை இந்தச் சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பட்டியலில் (Approved List of Models and Manufacturers - ALMM-Wind), அதானி விண்ட் நிறுவனத்தின் மூன்று காற்றாலை டர்பைன் தளங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 2025ஆம் ஆண்டிற்கான ப்ளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் (BloombergNEF) நிறுவனத்தின் உலகின் முன்னணி 15 காற்றாலை உற்பத்தியாளர்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய காற்றாலை டர்பைன் உற்பத்தி நிறுவனமாகவும் அதானி விண்ட் திகழ்கிறது.
அதானி விண்ட் நிறுவனத்தின் MWL160-5.2 மெகாவாட் காற்றாலை தளம், ALMM-Wind பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் அதிக உற்பத்தித் திறன் கொண்ட நிலப்பரப்பு காற்றாலை டர்பைன்களில் ஒன்றாகும்.
உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் காவ்டாவில் (Khavda), இந்தக் காற்றாலை தளத்தின் நிறுவப்பட்ட மொத்த உற்பத்தித் திறன் 2 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது.
சமீபத்தில் பெறப்பட்ட புதிய ஆர்டர்களையும் சேர்த்து, அதானி குழுமத்திற்கு வெளியே உள்ள சுயாதீன மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து (Independent Power Producers - IPPs) அதானி விண்ட் நிறுவனம் பெற்றுள்ள ஒட்டுமொத்த ஆர்டர்களின் மொத்த உற்பத்தித் திறன் தற்போது 1 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது.
அதானி விண்ட் பற்றி
ANIL - அதானி நிறுவனத்தின் காற்றாலை உற்பத்திப் பிரிவு. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ANIL), மேம்பட்ட காற்றாலை தொழில்நுட்பம் மற்றும் சிறந்த உற்பத்தித் திறன் மூலம் உலகளாவிய தூய்மையான எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்தி வருகிறது.
குஜராத் மாநிலம் முந்த்ராவில், இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றிற்கு அருகே முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்திக் கட்டமைப்பை நிறுவனம் கொண்டுள்ளது.
இந்த உற்பத்திக் கட்டமைப்பின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்குத் திறன்மிக்க, தேவைக்கேற்ப விரிவுபடுத்தக்கூடிய காற்றாலை எரிசக்தித் தீர்வுகளை நிறுவனம் வழங்கி வருகிறது.
தற்போதுள்ள 2.25 ஜிகாவாட் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் ரோஸ்டாக் (Rostock) நகரில் ஒரு தொழில்நுட்ப மையத்தையும், இந்தியாவில் பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவையும் நிறுவனம் கொண்டுள்ளது.
3.x மெகாவாட் முதல் 5.x மெகாவாட் வரையிலான பல்வேறு காற்றாலை விசையாழி தளங்களை உள்ளடக்கிய தனது தயாரிப்பு வரிசையில், அதானி விண்ட் நிறுவனம் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்பான 5.2 மெகாவாட் காற்றாலை விசையாழி, இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த நிலப்பரப்பு காற்றாலை டர்பைன்களில் ஒன்றாகும்.
ப்ளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் (BloombergNEF) நிறுவனத்தின் உலகின் முன்னணி 15 காற்றாலை டர்பைன் உற்பத்தியாளர்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய காற்றாலை டர்பைன் உற்பத்தியாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள அதானி விண்ட், புதுமையான தொழில்நுட்பங்கள், உற்பத்தி விரிவாக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் தூய்மையான எரிசக்தித் துறைக்கான விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications
