நகைகளை பிரித்து பதுக்கி வைத்திருந்த இடத்தை சொன்ன நிஷாந்த்.. எஞ்சிய 6.2 கிலோ நகையை மீட்ட போலீசார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கைது செய்து விசாரித்தபோது பதுக்கி வைத்திருந்த இடத்தை நிஷாந்த் கூறியதை அடுத்து, எஞ்சிய 6.2 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். ஏற்கனவே நகைகள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலும், கபாலீஸ்வரர் மலையிலும் பிரித்துப் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகைக் கடை திறக்கப்பட்டது. மேல் தளங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Police Recover Remaining Stolen Jewellery Based on Nishanth s Confession in Madurai Robbery Case

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர்.

கொள்ளைக்கு முன்பாக ஒரு மர்ம நபர் வாடிக்கையாளரை போல பலமுறை கடைக்கு வந்து சென்றதைக் கண்டறிந்தனர். கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபர் மதுரையைச் சேர்ந்த நிஷாந்த் என்பது கண்டறியப்பட்டது.

நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மீனாட்சி, நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்த் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

தலைமறைவாக இருந்த நிஷாந்த்தை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்தது தெரியவந்தது. சந்தேகப்படும்படியாக இருந்த அவரை பேருந்து நடத்துனர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தருமபுரி அதியமான் கோட்டை காவல்துறையினர் பெங்களூர்சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேஷம்பட்டி என்ற இடத்தில் தனியார் பேருந்து சோதனை செய்ததில் நிஷாந்த் அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். அப்போது அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன? இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நிஷாந்தை, போலீசார் மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர். கொள்ளைக்கான திட்டம் எப்போது தீட்டப்பட்டது? கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்ய முயற்சி நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்து விசாரித்தபோது பதுக்கி வைத்திருந்த இடத்தை நிஷாந்த் கூறியதை அடுத்து, எஞ்சிய 6.2 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். ஏற்கனவே நகைகள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலும், கபாலீஸ்வரர் மலையிலும் பிரித்துப் பதுக்கி வைத்திருந்துள்ளார். நகைக் கடை கொள்ளையில் மீதமுள்ள நகைகளும் நிஷாந்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+