4 மணி நேர விசாரணையில் வாக்குமூலம் கொடுத்த நிஷாந்த்.. உடனே மீனாட்சி வீட்டில் இறங்கிய போலீசார்!
தொடர்பாக யூடியூபர் மீனாட்சி நாச்சியார் வீட்டில் சோதனை நடைபெற்றது. கொள்ளையன் நிஷாந்த் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், நிஷாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீனாட்சி வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நவம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடை பூட்டப்பட்ட பிறகு, நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்தக் கொள்ளை அரங்கேறியது. மறுநாள் காலை ஊழியர்கள் கடையைத் திறந்தபோதுதான் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இந்த கொள்ளையை நிஷாந்த் என்பவர் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மீனாட்சி நாச்சியார் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தவர். நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டா இன்ப்ளுயன்ஸர் மீனாட்சி கொடுத்த தகவல்படி, நிஷாந்த்திற்கு சொந்தமான மாடக்குளம் கபாலீஸ்வரி அம்மன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள நிலத்தில் புதைத்து வைத்திருந்த 5 கிலோ நகைகளை மீட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் மேலும் சில இடங்களை போலீசார் தோண்டிப் பார்த்தனர். எதுவும் கிடைக்கவில்லை.
நகைக்கடையில் கொள்ளையடித்த நிஷாந்த் வீட்டிலும் ஒரு தனிப்படை மீண்டும் சோதனை நடத்தியது. இதில் ஒரு லேப்டாப், டம்மி பிஸ்டல் கிடைத்தது. சைபர் கிரைம் போலீஸ் மூலம் வரது லேப்டாப் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நகைக்கடை கொள்ளை தொடர்பாக இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் நிஷாந்த் இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலம் மீனாட்சி நாச்சியாரின் திருப்பாலை வீட்டில் தனிப்படை போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
மீனாட்சியின் தாயாரும் இன்ஸ்டா பிரபலமுமான இந்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கைதான நிஷாந்த்திடம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு அழைத்து வந்தனர்.
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நிஷாந்த் போலீசாரிடம் சொன்ன தகவல்களின் அடிப்படையில் நகைகளை மீட்க, மதுரை திருப்பாலையில் உள்ள மீனாட்சி வீட்டில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.



Click it and Unblock the Notifications
