அடுக்கடுக்காய் மோசடி : முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் உறவினர் கைது
பெரம்பலூர்:
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகவும், சினிமாவில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கித் தருவதாகவும்ஏமாற்றிய பெரம்பலூரைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏவின் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தமோசடியில் திரைப்பட இயக்குனர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பெரம்பலூருக்கு அருகில் இருக்கும் ஈச்சம்பட்டியைச் சேர்ந்த வேம்படியான் மகன் மணிவண்ணன் (வயது 33).
இவர் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் தனித்தொகுதியின் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. கருப்பசாமியின்உறவினர். இதைப் பயன்படுத்தி சென்னையிலிருக்கும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
அப்போது தமிழக தேர்வாணையத்தில் பணிபுரியும் தேவராஜன் என்பவருடன் நட்பு கொண்டார். இதைஉபயோகப்படுத்தி பலருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளார்.
விழுப்புரத்திற்கு அருகிலிருக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜாராம் தனது அண்ணன்மகன் சத்தியப்பிரியனுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருமாறு கேட்டு ரூ 10 லட்சம் கொடுத்தார்.
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிப்பதற்காக 3 பேருக்கு சீட் வாங்கித் தருமாறுகோரி அவர்களிடமிருந்து ரூ 8 லட்சம்வாங்கி அதையும் மணிவண்ணனிடம் கொடுத்தார் ராஜாராம். ஆனால் மணிவண்ணன் மருத்துவக் கல்லூரியிலும்சீட் வாங்கித் தரவில்லை. ஆசிரியர் பயிற்சிபள்ளியிலும் சீட் வாங்கித் தரவில்லை.
இதையடுத்து இது குறித்து பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசில் மணிவண்ணன் மீது ராஜாராம் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் தலைமறைவாக இருந்த மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் மேலும் பலரையும் மணிவண்ணன் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
பெரம்பலூருக்கு அருகிலிருக்கும் புதுக்குறிச்சியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் போலீஸ் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 35,000மும், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் தங்கையா என்பவருக்கு எஸ்.ஐயாகபதவி உயர்வு வாங்கித் தருவதாக ரூ 50,000மும், பழனியாண்டி என்பவருக்கு ராமர்பிள்ளை தயாரித்த மூலிகைபெட்ரோலுக்கு ஏஜென்சி வாங்கித் தருவதாக கூறி ரூ 1 லட்சமும், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சீட் வாங்கித்தருவதாக 7 பேரிடம் ரூ 15 லட்சமும் மோசடி தெரிய வந்தது.
மோசடி செய்த பணத்தைக் கொண்டு சென்னையைச் சேர்ந்த டைரக்டர் குருதனபால் மூலமாக ரூ 19 லட்சம் முதலீடுசெய்து 2 படங்களை எடுத்துள்ளார்.
தனக்கு பணம் கொடுத்தவர்களால் நெருக்கடி அதிகரித்ததால் பணத்தை திருப்பி தருமாறு குருதனபாலை,மணிவண்ணன் கேட்டார். ஆனால் தற்போது தன்னிடம் பணம் இல்லை என குருதனபால் கூறிவிட்டார்.
தான் பைனான்ஸ் செய்த படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக பல பெண்களிடம் ஆசை காட்டிஉல்லாசமாக இருந்ததையும் மணிவண்ணன் விசாரணையின் போது ஒப்புக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் டைரக்டர் குருதனபால் மற்றும் மோசடியில் சம்பந்தப்பட்டஅனைவரையும் கைது செய்து விசாரிப்பதற்காக சென்னை சென்றுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications