கருணாநிதி-பா.ஜ.க. மோதல் ஆரம்பம்
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறியதன் அடிப்படையில்தான் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பஅழைக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இப்போது அத்வானிமாற்றிப் பேசி வருகிறார் என திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கூறினார்.
சனிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி கூறியதாவது:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க முடியாது என்று அத்வானிதான் முதலில் கூறினார். தேர்தலில்போட்டியிடக்கூட தகுதி பெறாத ஜெயலலிதாவை தமிழக முதல்வராகப் பதவி ஏற்க ஆளுநர் அழைக்க மாட்டார்என்று மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லியும் உறுதியாகக் கூறினார்.
ஆனால், மத்திய அரசு தனது நிலையை திடீரென மாற்றிக் கொண்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் தமிழகஆளுநரைத் திரும்பப் பெறமாட்டோம் என்று அத்வானி தற்போது கூறி வருகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு ஆளுநரைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற எங்கள் முடிவை மீண்டும் மீண்டும்வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.
ஜெயலலிதா பதவி ஏற்றதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முடிவுக்காகக்காத்திருக்கிறோம்.
ஜெயலலிதாவுடன் மதிமுகவுக்கு ரகசிய தொடர்பு இருந்தது என்று நான் கூறவேயில்லை. ஆனால், நான் அவ்வாறுபேசியதாகக் கூறி அதை எதிர்த்து மதிமுக எங்கள் மேல் வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது. அவ்வாறுஅவர்கள் வழக்குத் தொடர்ந்தால் அதைச் சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் கருணாநிதி.
பாரதீய ஜனதாவுடன் ஜெயலலிதா நெருக்கமாகி வருகிறார் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில் அத்வானிமற்றும் அருண் ஜேட்லி ஆகியோருக்கு எதிராக கருணாநிதி கருத்துத் தெரிவித்திருப்பது மத்திய பாஜக அரசுக்கும்திமுகவுக்கும் மோதல் தொடங்கியிருப்பதையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் திமுக பங்கேற்றுள்ளது. திமுகவுக்கு 13 எம்.பி.க்கள்உள்ளனர்.
அதிமுகவிடம் 11 எம்.பி.க்கள் உள்ளனர். காலியாகப் போகும் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளையும் அதிமுககைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications