நார்வே தூதர் ஒதுக்கப்படுகிறாரா?
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தைக்கான சூழ்நிலையைஏற்படுத்தும் முயற்சியில் இனி நார்வே அரசு ஈடுபடும் என இலங்கை அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுவரை அமைதிப் பேச்சுவார்தையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நார்வே தூதர் எரிக் சோல்ஹேமைஇலங்கை அரசு ஒதுக்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
நார்வே அமைதி தூதரான சோல்ஹேம் 15 மாதங்களாக இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரது முயற்சியில் இதுவரை எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை.
விடுதலை புலிகள் தங்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என கோரி வருகின்றனர்.ஆனால் இதற்கு இலங்கை அரசு மறுத்து விட்டதால் பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில்தான் தோர்ப்ஜோர்ன் ஜாக்லான்ட் வியாழக்கிழமை மாலை எரிக் சோல்ஹேமுடன் இலங்கை வந்தார்.அவர் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை உடனே நார்வே கிளம்பிசென்று விட்டார்.
இனி இலங்கை அரசுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கானசூழ்நிலை குறித்த உயர்மட்ட விஷயங்களில் நார்வே அரசு ஈடுபடும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை தூதராக இருந்த எரிக் சோல்ஹேம் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுவாரா என்பது குறித்துஎதுவும் கூறப்படவில்லை.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பு நார்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லான்ட்,வியாழக்கிழமை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை சந்தித்து பேசிவிட்டு நார்வே கிளம்பிச் சென்றபின்வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
வியாழக்கிழமை நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டிருந்தநார்வே தூதர் எரிக் சோல்ஹேமும் இலங்கை வந்தனர்.
நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தபேச்சுவார்த்தையில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும் கலந்து கொண்டார்.ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எரிக் சோல்ஹேம் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து நார்வே தூதரக அதிகாரி டோமாஸ் ஸ்டான்ஜ்லான்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தபேச்சுவார்த்தை இலங்கை அதிபருக்கும், நார்வே வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையேயானபேச்சுவார்த்தை என்றார்.
ஆனாலும் அவர் பேச்சுவார்த்தையில் எரிக்சோல்ஹேம் பங்கேற்காதது பற்றி எதுவும் கூற மறுத்து விட்டார்.அரசியல் நோக்கர்கள் கூறுகையில், எரிக் சோல்ஹேம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் என கூறுகின்றனர்.
இலங்கை அரசின் அறிவிப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா எனபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications