விவசாயிகள் கடன் வட்டி தள்ளுபடி: வரவேற்கிறது சி.பி.ஐ.
தஞ்சாவூர்:
விவசாயிகளுக்கான கடன் வட்டியையும் அபராத வட்டியையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தள்ளுபடி செய்ததைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) வரவேற்றுள்ளது.
சி.பி.ஐ.யின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தமிழ்நாடு செயலாளர் நல்லகண்ணுவும் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
அவர்கள் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ 310.51 கோடி அளவிலான கடன்வட்டி தள்ளுபடி விவசாயிகளுக்கு பெருமளவில்பலனளிக்கக்கூடியது. ஆனால், விவசாயிகள் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலகட்டத்தை அரசுநீட்டிக்கவேண்டும்.
ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது சரிதான். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களால், அ.தி.மு.க.சட்டசபைத் தலைவரவாக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதனால் அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது தவறல்ல.
தி.மு.க.வும், தமிழக பா.ஜ.க.வும் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கூறுவதை எதிர்த்துஉயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் நடத்தப்படும் என தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார். அதைவரவேற்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான எங்கள்கூட்டணி தொடரும்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் முன், வாக்காளர் பட்டியல் சரிப்படுத்தப்படும் எனவும் தீர்மானம்நிறைவேற்றியிருக்கிறோம் என்றனர்.
நல்லகண்ணு கூறுகையில், தமிழக விவசாயிகள் கடும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வருவதால், காவேரி நடுவர்மன்றத்தை விரைவில் தீர்ப்பு வழங்குமாறு அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications