திமுகவில் சேர தயாராகிறார் தாமரைக்கனி!
சென்னை:
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனி தி.மு.க.வில் சேருவதற்குத் தயாராகி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பல ஆண்டுகள் அசைக்க முடியாத நபராக இருந்தவர்தாமரைக்கனி. அ.தி.மு.க.வில் சேர்ந்து போட்டியிட்டாலும், சுயேச்சையாக போட்டியிட்டாலும் இங்கு அவர்தான்வெல்வார் என்ற நிலை இருந்து வந்தது.
இந்தத் தேர்தலில் நிலைமை மாறி விட்டது. சொந்த மண்ணிலேயே டெபாசிட் இழந்தார் தாமரைக்கனி. அவரைத்தோற்கடித்தது வேறு யாருமல்ல சொந்த மகனேதான்.
அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார் தாமரைக்கனி. அவரை எதிர்த்துமகன் இன்பத்தமிழனை நிறுத்தியது அ.தி.மு.க. மேலிடம்.
அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான இந்த மோதல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடைசியில் மகன் எளிதாக வென்றார். அப்பா டெபாசிட் இழந்தார்.
தேர்தல் தோல்வியையடுத்து அமைதியாக இருந்து வந்த தாமரைக்கனி சமீபத்தில் தான் தி.மு.க.வில் சேரப்போவதாக அறிவித்தார். அறிவித்த அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள்சுமத்தப்பட்டன. மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்டாலும் கூட தினசரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி விண்ணப்பித்தார். அதை ஏற்ற கோர்ட், தற்போதுஅவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து விட்டது. தற்போது சுதந்திரமாக உலவ தாமரைக்கனிஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தி.மு.க.வில் சேருவதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார் தாமரைக்கனி. முதல் கட்டமாகதனது காரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, உதயசூரியன் மற்றும் எம்.ஜி.ஆர். படங்களை வரைந்துள்ளார்.கருப்பு-சிவப்பு கரைபோட்ட வேட்டி கட்ட ஆரம்பித்துள்ளார். வீட்டிலும் கருணாநிதி படத்தை புதிதாகமாட்டியுள்ளார்.
அடுத்த கட்டமாக சென்னைக்குப் புறப்பட உள்ளார். அநேகமாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தி.மு.க.தலைவர் கருணாநிதியைச் சந்திக்கும் அவர், தன்னை தி.மு.க.வில் ஐக்கியப்படுத்திக் கொள்வார் என்று தெரிகிறது.
தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான தாமரைக்கனி, தி.மு.க.வில் சேர்ந்து, எம்.ஜி.ஆரின் பரம விரோதியாக கருதப்பட்டகருணாநிதியுடன் கைகோர்த்துக் கொள்ளப் போவதை ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications