வறுமை: குழந்தையை அரசிடம் கொடுத்தார் கூலித்தொழிலாளி
சேலம்:
பத்தாவதாகப் பிறந்த பெண் குழந்தையை அரசுக்கு அளித்தார் கூலித் தொழிலாளி. வறுமையினால் காப்பாற்றஇயலாத நிலையில் இருந்த இந்தக் குழந்தை காப்பகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஓமலூர் தாலுகா, காடையம்பட்டி அருகே உள்ள ஆண்டிக்கொட்டாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(45). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாப்பா. இரண்டு ஆண் குழந்தைகள் 4 பெண் குழந்தைகள்என 6 குழந்தைகளைப் பெற்ற மகராசியாக இருந்தார் பாப்பா.
இந்நிலையில், இன்னுமொரு திருமணம் செய்து கொண்டார் பழனிச்சாமி. மஞ்சுளா என்ற அவரும் முதல்மனைவிக்குச் சளைத்தவர் அல்ல என நிரூபிக்க ஒரு ஆண் குழந்தையையும் இரண்டு பெண் குழந்தைகளைப்பெற்றெடுத்தார்.
9 பேரைக் கொண்ட பெரும் குடும்பஸ்தானாகிவிட்ட பழனிச்சாமி, குழந்தைகளை வைத்துக் காப்பாற்ற கூலி வேலைசெய்து வந்தார்.
இப்போது அடுத்த குழந்தையை மஞ்சுளா ஈன்றெடுத்தார். அந்தக் குழந்தையை வளர்க்க வழி தெரியாமல்விழித்துக் கொண்டிருந்தார் பழனிச்சாமி. கூலி வேலையில் கிடைத்த பணம், மற்ற குழந்தைகளுக்கே போதாமல்வறுமையில் வாழ்ந்து வந்தார்.
இவரது நிலையைக் கண்ட மருத்துவமனையைச் சேர்ந்த சிலர், மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர்.மாவட்ட கலெக்டர், தாசில்தார் அப்ரோஷ் பாஷாவிடம் குழந்தையை அரசிடம் ஒப்படைக்கக் கூறினார்.
இதன்படி, இதையடுத்து 15 நாட்களே ஆன குழந்தையை மஞ்சுளா, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்செம்மலையிடம் அளித்தார். அந்தக் குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை அமைச்சர்செய்தார்.
இதன்பின்னர் அமைச்சர் செம்மலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 1992 முதல் 2001ம் ஆண்டு வரை இதுவரை 110 குழந்தைகள் அரசு வசம் ஒப்படைக்கட்டுள்ளன. கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ஒரு ஆண்டு மற்றும் 15 நாள் வயதுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இக்குழந்தைகள் சென்னையில் உள்ள காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 13 குழந்தைகள்,பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னர் திரும்ப அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications