மெட்ரிக்கில் முத்திரை பதித்த மாணவ, மாணவிகள்
சென்னை:
மெட்ரிகுலேசன் தேர்வுகளில் நிறைய மாணவ, மாணவிகள் தனி முத்திரை பதித்து, சாதனை புரிந்துள்ளனர்.
கணிதத்தில் 200க்கு 200 மார்க்குகளைப் பெற்று, முதலிடம் வகிக்கிறார் மதுரை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். மதுவந்தி. மொத்தத்தில் 1100க்கு 1057 மார்க்குகளைக் குவித்துள்ளார் இவர்.
தன்னுடைய கணித ஆசிரியை ரமா சுந்தரியும், வகுப்பாசிரியை ரஜினாவும்தான் தன் வெற்றிக்குக் காரணம் என்றுகூறும் மதுவந்திக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம்.
திருச்சி ரெங்காநகர் வேளாங்கண்ணி ராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். தேவிகுமார்,அறிவியல் பாடத்தில் 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றார்.
இவருடைய தந்தை எஸ். ராமலிங்கம் ஒரு ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறைப் பொறியாளர் ஆவார். தாய் பெயர்சரஸ்வதி. கோடை விடுமுறையில், கம்ப்யூட்டர் படிக்கச் சென்ற தேவிகுமார், தற்போது "ஜாவா"வை முடிக்கப்போகிறார்.
கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் எஸ். முஸ்தபாதான் அரபு மொழியில் முதலிடம் பெற்றமாணவர். இப்பாடத்தில் இவர் 200க்கு 197 மார்க்குகளை அள்ளியிருக்கிறார்.
முஸ்தபாவின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். தன்னுடைய பள்ளி முதல்வரையும், ஆசிரியரையும் இவர்வாயாரப் புகழ்ந்து தள்ளுகிறார்.
ஆங்கிலோ-இந்திய பாடமுறைத் தேர்வில், கணிதம், அறிவியல், வரலாறு-புவியியல் ஆகிய 3 பாடங்களிலும்200க்கு 200 மார்க்குகளைப் பெற்று, முதல் இடத்தைத் தட்டிச் சென்றுள்ளார் கோவை மாணவியான எல். ஆன்னிபிரியதர்ஷிணி.
புனித பிரான்சிஸ் ஆங்கிலோ-இந்தியன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் படித்த பிரியதர்ஷிணி, தான் ஒரு மெரைன்இஞ்சினியர் ஆக வேண்டும் என்று கடலளவு ஆசைப்படுகிறார். செஸ், பெயிண்டிங் போன்றவற்றிலும் ஈடுபாடுகொண்ட இவர், பேச்சுப் போட்டிகளிலும் பல பரிகளை வென்றுள்ளார். புத்தகங்களும் அதிகம் படிப்பாராம்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், மலையாளத்தில் முதலிடம் பெற்றுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலாமேல்நிலைப் பள்ளி மாணவி தீனா சைன்.
தீனாவின் தந்தை வி.கே. சைன் ஒரு முன்னாள் இராணுவ வீரர். தாய் பெயர் சைலஜா. டாக்டராகி ஏழை மக்களுக்குத்தொண்டாற்றவே தீனா சைன் விரும்புகிறார்.












Click it and Unblock the Notifications