நெய்வேலி தண்ணீர் சென்னை வந்தது
சென்னை:
நெய்வேலியிலிருந்து கொண்டு வரப்பட்ட குடிநீர் சென்னைக்கு வந்து சேர்ந்தது. செவ்வாய்க்கிழமை சென்னைநகரில் நெய்வேலி தண்ணீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.
சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைத் தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளைமுதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகஈரோட்டிலிருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது.
நெய்வேலி குடிநீர் திங்கள்கிழமை சென்னைக்கு வந்து சேர்ந்தது. முதல் லாரி பிற்பகல் 12 மணியளவில் சென்னைவந்து சேர்ந்தது. பிற லாரிகள் அதைத் தொடர்ந்து வந்தன. மொத்தம் 12 லாரிகள் வந்துள்ளன. தினசரி 500லாரிகள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு லாரியிலும் 10,000 லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தினசரி 200 மில்லியன் தண்ணீரைவிநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து லாரிகளும் நேராக கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குதண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. இந்த லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள தண்ணீர் செவ்வாய்க்கிழமைமுதல் சென்னை நகரில் விநியோகிக்கப்படவுள்ளது.
நெய்வேலி குடிநீர் லாரிகள் தவறுதலாக பயன்படுத்துவதைத் தடுக்கவும், முறையாக நகருக்குள் வந்து சேருவதைஉறுதி செய்யவும் செங்கல்பட்டு, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications