சர்க்காரியா: கருணாநிதி மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதிப்பாரா?
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சர்க்காரியாகமிஷன் அறிக்கையின் அடிப்படையில் கருணாநிதி மீது வழக்கு தொடர்வது குறித்தும்,காலாவதியான இந்த விவகாரத்திற்கு புத்துயிர் அளிப்பது குறித்தும்விவாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் சர்க்காரியா விவாகரம் சூடு பிடித்துள்ளது.
திங்கள்கிழமை மாலை 3.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகஅமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டம் 3 மணி நேரம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சத்துணவில்பால்பவுடர் வழங்குவது தொடர்பாகவும், தொடர்ந்து சத்துணவில் முட்டை வழங்குவதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது தவிர முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்தும்,அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜெயலலிதா மீது தனிநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் விரைவில் முடிவடைவதால் அதை நீடிப்பதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை மீண்டும்விசாரிப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்க்காரியா கமிஷன் சிபாரிசுகள் காலாவதியாகிவிட்டதால் இது குறித்து சட்டரீதியான ஆலோசனை பெற்று இந்த விஷயத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்தும்ஆலோசனை செய்யப்பட்டது.
இது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாநில ஆளுனர்பாத்திமா பீவிக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுனர் அனுமதித்தால் மட்டுமேசர்க்காரியா கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்காக ஆளுனரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளாதாகவும் தெரிய வந்துள்ளது.
அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் ஆளுனரை சந்திக்க முதல்வர் திட்டமிட்டிருந்தார்.ஆனால் அமைச்சரவை கூட்டம் நீண்டநேரம் நடந்ததால் அமைச்சரவை கூட்டத்தில்விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஜெயலலிதா (இன்று) செவ்வாய்க்கிழமைஆளுனரை சந்தித்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆளுனரிடம்கூறாமல் வெளியிடக் கூடாது என்பதால் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டவிஷயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூட்டப்படவில்லை. வழக்கம் போல்தான் கூடியது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆளுனருக்கு தெரிவிக்காமல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைவெளியிடுவது முறையல்ல. மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும்விரைவில் அறிவிக்கப்படும்.
வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்என்ற நம்பிக்கை உள்ளது.
தனி நீதிமன்றத்தின் காலம் நீடிக்கப்படுமா என்பது மிகப் பெரிய விஷயம். இது குறித்துவிரைவில் முடிவெடுக்கப்படும்.
உணவுத்துறை குறித்து நான் ஆய்வு செய்த போது ரூ .65 கோடி மதிப்புள்ள புழுத்தஅரிசி இருப்பதாக தெரிவித்திருந்தேன். அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்தபின் மொத்தம் ரூ. 125 கோடி மதிப்புள்ள அரிசி கெட்டுப்போன அரிசி எனதெரியவந்தது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை சமர்பிப்போம் என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications