உலக கோப்பை கிரிக்கெட்: பரிசு தொகை 5 மில்லியன் டாலர்
ஜொகன்னஸ்பெர்க்:
2003ம் ஆண்டு நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலக கோப்பைக்கான பரிசுத் தொகையை 5 மில்லியன் அமெரிக்க டாலராகஉயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் 2003ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில்நடைபெறவுள்ளன.
கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை விட குறைவாக இருந்தது. தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசுத் தொகை 5 மில்லியன் டாலராகஉயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மற்ற விளையாட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை கருத்தில் கொண்டுகிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இது குறித்து 2003ம் ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் செய்தித் தொடர்பாளர் ராட்னி ஹார்ட் மேன் தென்ஆப்பிரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)அனுமதி அளித்துள்ளது. போட்டியில் பங்கேற்ககும் நாடுகளின் கேப்டன்களுக்கு பரிசுத்தொகை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்பது குறித்து தெரியப்படுத்தப்படும்
போட்டி நடைபெறும் போது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும். அதிகாரம் இல்லாத யாரும் ஆடுகளத்திற்குள் செல்லஅனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் போட்டி நடைபெறும் போது பார்வையாளர்கள் யாரும் ஆடுகளத்திற்குள் நுழையமுடியாதபடி காவல் பலத்தப்படும்.
ஒவ்வொரு போட்டி நடைபெறும் போதும் டாஸ் போடுவதற்காக 1 அவுன்ஸ் எடை கொண்ட 54 தங்க நாணயங்கள்தயாரிக்கப்பட உள்ளன.
இந்த நாணயத்தின் ஒரு புறம் ஜனாதிபதி தாபோ பெகியின் உருவப் படத்தை பொறிக்க தென் ஆப்பிரிக்க அரசின் அனுமதியைகோரியுள்ளோம். நாணயத்தின் மறுபுறம் போட்டியில் அணியின் பெயர்கள், அந்த அணிகளின் சின்னம், போடி நடைபெறும்நாள், இடம் போன்றவை இடம்பெறும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications