வீரப்பனை சரணடைய வைக்கிறேன்: நெடுமாறன்
சென்னை:
இரு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால் காட்டுக்குச் சென்று வீரப்பனை சந்தித்து அவரை சரணடைய வைக்கிறேன் என்று தமிழர்தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பன் சரணடைகிறேன் என்று பல முறை கூறி விட்டார். ஆனால் இரு மாநில அரசுகளும் இதைக் காதில் போட்டுக் கொள்ளாமல்கூட்டு அதிரடிப்படையை காட்டுக்கு அனுப்பி வீரப்பனை வேவு பார்த்து வருகின்றனர்.
அதிரடிப்படையால் வீரப்பனை கண்டிப்பாகப் பிடிக்க முடியாது. அதிரடிப்படையை காட்டுக்கு அனுப்பியுள்ளதால் உயிர்ச்சேதமும்,பொருட்சேதமும் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக வீரப்பனை சந்தித்துப் பேச நான் காட்டுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்.
இருமாநில அரசும் கேட்டுக் கொண்டால் உடனடியாகக் காட்டுக்குச் சென்று வீரப்பனை சரணடைய வைப்பேன். வீரப்பன்சரணடைய விருப்பம் தெரிவித்து கடந்த மார்ச் 29 ம் தேதி ஒரு ஒலி நாடாவை என்னிடம் கொடுத்தார். இந்த ஒலி நாடாவை நான்அப்போதே, இரு மாநில அரசுகளிடம் ஒப்படைத்து விட்டேன்.
கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கொளுத்தூர் மணியை விடுவிக்கக்கோரியும், வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை வீரர்கள் காட்டுக்குச் சென்றதைக் கண்டித்தும் வரும் 5 ம் தேதி மேட்டூரில்ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் நெடுமாறன்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications