அமர்நாத் பக்தர்களுக்கு 12,000 வீரர்கள் காவல்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுககு பாதுகாப்பளிக்கும் பணியில் 12,000 பாதுகாப்புபடைவீரர்கள் நியமிக்கப்பட்டள்ளனர் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமயமலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயில். இது சிவபெருமான் ஸ்தலமாகும். இந்தகோவில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ளது. இந்த கோவில் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரவண பூர்ணிமா(பெளர்ணமி) விழா முக்கியமானதாகும்.அப்போது அமர்நாத் சிவ பெருமானை தரிசிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதற்காக சிவபெருமானைதரிசிக்க நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு யாத்திரை ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் அமர்நாத் குகை கோவிலுக்குச்செல்ல குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் 12,000 பாதுகாப்பு படைவீரர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர் என ஒரு பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின்போது, ஆகஸ்டு மாதம் 1ம் தேதி பாலகம் பகுதியில் பக்தர்கள் தங்கியிருந்தஇடத்தின் மீது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஜம்மு ரயில் நிலையம்அருகே குண்டு வெடிப்பில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி செய்தியாளர்களிடம் ஒரு ராணுவ அதிகாரிகூறும்போது:

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 2,000 புறக்காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ராணுவம், எல்லை பாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ், இந்திய-திபெத் எல்லைப்பாதுகாப்பு போலீஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசைச் சேர்ந்த 10,000 பேர் பாதுகாப்புப் பணியில்அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் மலைக்கு செல்லும் பாதையிலும், தீவிரவாதிகள் ஊடுறுவ வாய்ப்புள்ளதாக கருதப்படும்பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். எந்த விதமான அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாதுஎன்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

காஷ்மீர் போலீஸ் கமிஷனர் கூறும்போது:

தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்கள் காப்பாற்றப்பட வேண்டும். கடுமையான குளிரினால் பாதிக்கப்படும்பக்தர்களுக்கும் கவனிக்கப்பட வேண்டும். இது தவிர, மேலும் பல பணிகளிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபடவேண்டியுள்ளது.

1996ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட பனிப்புயலுக்கு 240 பக்தர்கள் பலியானார்கள் என்றார்.

அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு மாதம் 4ம் தேதிவரை தொடரும். ஆகஸ்டு மாதம் 4ம் தேதி ஸ்ரவண பூர்ணிமா(பெளர்ணமி) நிகழ்கிறது. அன்றைய தினம் அமர்நாத் குகையிலிருக்கும் சிவ பெருமானை தரிசிப்பது புண்ணியமாககருதப்படுகிறது.

ஜம்முவிலிருந்து கிளம்பும் பக்தர்கள் பாலகம் வழியாக மலை ஏறத் துவங்குவார்கள். 14,000 அடி உயரத்தில்இருக்கும் கோவிலை அடைய46 கிலோ மீட்டர் மலை ஏற வேண்டும்.

இந்த பயணம் கடினமானது. இந்த மலை பாதை சிறியது. இங்கு நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் மழைபெய்தால் பாதை வழுக்கும் அபாயமும் உள்ளது. . இதனால் மழை பெய்யும் போது பக்தர்கள் மிகவும்எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது அவசியமாகும்.

இந்த கோவிலை பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆடு மேய்க்கும் முஸ்லிம் ஒருவர் கண்டுபிடித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, அவர் இந்து பூசாரியிடம் தெரிவித்தார். அதன் பின் ஆண்டு தோறும் பக்சதர்கள்இந்த கோவிலுக்கு வர ஆரம்பித்தனர்.

பெரும்பாலான பக்தர்கள் டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்துதான் வருகிறார்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+