பிரியங்கா இப்போது அரசியலுக்கு வரமாட்டார்: சோனியா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அரசியலுக்கு வரும் எண்ணம், தன் மகள் பிரியங்காவுக்குத் தற்போதைக்கு இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி கூறினார்.

தற்போது அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

பிரியங்காவுக்கு மட்டுமல்ல, என் மகன் ராகுலுக்கும் முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களாகவே விரும்பினால்மட்டுமே அரசியலுக்கு வருவார்கள். அப்படி அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போதைக்கு அவர்களிடம் இல்லை.

நான் அமேதி தொகுதியில் போட்டியிடும் போது, உண்மையிலேயே பிரியங்கா எனக்காக உழைத்ததை நான் மறக்கவோ,மறுக்கவோ முடியாது. அவள் இப்போதும் என்னுடைய அமேதி தொகுதியில், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசியலுக்குஅப்பாற்பட்டு உதவிக் கொண்டுதான் இருக்கிறாள்.

ஆனால், அவள் விருப்பப்பட்டால் அரசியலுக்கு வரலாம். அதை நான் எப்போதும் தடை செய்ய மாட்டேன் என்றார் சோனியா.

பிரதமர் பதவி மேல் ஆசை இல்லை

காங்கிரஸ் கட்சியில், பிரதமராக வருவதற்குத் தகுதியுடையவர்கள் என்னைவிட எத்தனையோ பேர் உள்ளனர். அதனால், பிரதமர்பதவிக்கெல்லாம் நான் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்றும் அமெரிக்க விஜயத்தின்போது சோனியா கூறியுள்ளார்.

1998ல் அவர் லோக்சபா தேர்தலின் போதுகூட, பிரதமர் பதவியைக் குறி வைத்துதான் போட்டியிட்டார். அதற்குப் பிறகு, இப்படிஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ., ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+