சுதாகரனுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
தனது உதவியாளரும், சின்ன எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் முன்னாள் அமைப்புச் செயலாளருமான கோபு ஸ்ரீதரை கொலைசெய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி கே.பாஸ்கரன், இவ்வழக்கில் சுதாகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.
தனது உதவியாளர் கோபுவைக் கொலை செய்து விடுவதாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக சுதாகரன் மேல் வழக்குத்தொடரப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.
முன்னதாக, சின்ன எம்.ஜி.ஆர்.நற்பணி மன்றத்தில் செயலாளராக வேலை செய்து வந்த கோபு ஸ்ரீதர் சுதாகரன் தன்னைக் கொலைசெய்து விடுவதாக மிரட்டியதாகக் கடந்த ஜூன் 13 ம் தேதி போலீசில் புகார் செய்தார்.
இருவருக்கும் இடையே பண விஷயம் காரணமாக தகராறு இருந்ததாகவும் கோபு தனது புகாரில் கூறியிருந்தார். இதையடுத்துசுதாகரன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸார் சுதாகரன் வீட்டில் சோதனை செய்ததில் அவர்களுக்கு 16 கிராம் ஹெராயின் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழும் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications