ராஜினாமா செய்தார் பாத்திமா பீவி
சென்னை:
தமிழக ஆளுநர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக பாத்திமா பீவி ராஜினாமா கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் அநாகரிகமான முறையில் சிபிசிஐடி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். இதுகுறித்து தமிழக ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள் ஒரு விளக்க அறிக்கையை அனுப்பவேண்டும் என்று மத்திய அரசு பாத்திமா பீவியைக் கேட்டுக் கொண்டது.
பாத்திமா பீவியும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முன்னதாகவே அறிக்கையை அனுப்பி விட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழக ஆளுநரைத் திரும்ப அழைத்துக் கொள்ளமுடிவு செய்தது. மத்திய அமைச்சரவையின் இந்தப் பரிந்துரை உடனடியாக ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கும்அனுப்பப்பட்டது.
தமிழக ஆளுநர் சுயமாக, நடுநிலையான எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல், தமிழக அரசுக்கும் போலீஸாருக்கும் ஆதரவாகப்பேசி, தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆளுநர், தன் கடமையிலிருந்துதவறிவிட்டதால், அவரைத் திரும்ப அழைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அந்தப் பரிந்துரையில்கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, உடனடியாகத் தமிழக ஆளுநரைத் திரும்ப அழைக்கஉத்தரவிட்டார்.
ஆனால், மத்திய அமைச்சரவையின் முடிவு தெரிந்த உடனேயே, பாத்திமா பீவி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பேக்ஸ் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பினார்.
74 வயதான பாத்திமா பீவி, தமிழக ஆளுநராக கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி பதவியேற்றார். இவர் தமிழகத்தின்முதல் பெண் ஆளுநர் ஆவார். இது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்,தமிழக ஆளுநராகப் பதவியேற்றதும் இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications
