ராஜீவ் கொலை வழக்கு: நியூசிலாந்தில் தமிழர்- சீக்கியரிடம் சி.பி.ஐ. விசாரணை
சிட்னி:
ராஜீவின் கொலை வழக்கு பற்றிய வழக்குகள் முடிவடைந்து, கொலையாளிகளுக்குத் தண்டனையும் அளிக்கப்பட்டுவிட்டாலும், கொலை பற்றிய விசாரணை இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது.
நியூசிலாந்தில் வசித்துக் கொண்டிருக்கும் 3 இந்தியர்கள், ராஜீவ் கொலையில் சம்பந்தப் பட்டுள்ளனர் என்றுசந்தேகப்பட்ட இந்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ., சத்தமில்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு சென்று வந்தது.
அங்கு சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்டவர்களில் 2 பேர் தமிழர்கள், ஒருவர் சீக்கியர். ராஜீவ் கொலை பற்றி இந்த 3பேரிடமும் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ராஜீவ் கொலைக்கும்இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது பற்றித் தெரியவில்லை.
விசாரணைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் சி.பி.ஐ.க்கு நியூசிலாந்து புலனாய்வுத் துறையினர் அளித்தனர்.ஆனாலும், "விசாரணை பற்றிய விவரங்கள் பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது; சி.பி.ஐ.தான் கூற வேண்டும்"என்று பதுங்கிக் கொள்கிறார்கள் நியூசிலாந்து போலீஸார்.
இந்தக் கொலை வழக்கு ஒரு சென்சிட்டிவான விஷயம் என்பதால், சி.பி.ஐ.யின் இந்த நியூசிலாந்து விஜயம் படுரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, தமிழகத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் தேர்தல் பிரசாரம் செய்ததையும்,அப்போது விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுக்கு அவர் பலியானதையும் அவ்வளவு எளிதாக யாரும்மறந்திருக்க முடியாது.
பல ஆண்டுகள் நடந்த இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பில், 7 பேருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டதும்அனைவருடைய நினைவிலும் இருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications