பிஜியில் பரபரப்பு: ராணுவ தலைவரை கொல்ல திட்டம்
சுவா:
பிஜி நாட்டில் தேர்தல் நடப்பதற்கு 6 வாரங்களே இருக்கும் நிலையில், பிஜியின் ராணுவ தலைவரையும், உயர்ராணுவ அதிகாரிகளையும் கொல்லத் திட்டமிடப்பட்டு இருப்பதாக வந்த தகவல் அங்கு பரபரப்பை எற்படுத்திஉள்ளது.
இந்தச் செய்தி பிஜியில் இருந்து வரும் சன் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கில் ப்ளாட் என்றதலைப்பில் வெளியாகியுள்ள இச்செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
ராணுவ தலைவர் கமான்டர் கமோடர் ஃப்ராங்க் பைனிமாராமாவையும், மற்றும் சில உயர் ராணுவஅதிகாரிகளையம் கொல்ல திட்டம் தீட்டப்பட்டு இருந்தது.
ராணுவத்தின் யுத்த யுக்திகள் தீட்டும் குழுவில் இருக்கும் அதிகாரிகளால்தான் இந்தத் திட்டம் தீட்டப்பட்டது.இவர்கள் ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் தேர்தலுக்கு முன் கமான்டரைக் கொல்ல வேண்டும் என திட்டம்தீட்டியிருந்தனர். இத்திட்டத்தைத் தீட்டிய அதிகாரிகளில் சிலர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஜார்ஜ் ஸ்பைட்நடத்திய கலகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தக் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டதாக, 2 கர்னல்கள் மீதும், ஒரு ராணுவ மேஜர் மீதும் பைனிமாராமா குற்றம்சுமத்தி உள்ளார். இந்த அதிகாரிகள் சென்றமுறை நடத்தப்பட்டது போன்ற மற்றொரு கலகத்தை நடத்ததிட்டமிடிருந்தார்கள் என பைனிமாராமா குற்றம் சாட்டியுள்ளார்.
கொலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்தாக கூறப்படும் அதிகாரிகளை "சன்" பத்திரிக்கையின் தலையங்கம் கடுமையாகசாடி உள்ளது. கொலைத் திட்டம் தீட்டியிருந்த அதிகாரிகள், முதலில் நாட்டைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.அதன் பின்னரே அவர்கள் தங்கள் சொந்த நலனை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அந்தத் தலையங்கத்தில்கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஸ்பைட் தலைமையில் நடந்த கலவரத்திற்கு பின்னர் அங்கு சட்டம் ஒழுங்கும் சீராகஇல்லை. சகஜ நிலையும் இன்னும் திரும்பவில்லை,
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications